எந்த இனத்தைச் சார்ந்த மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் மனதளவில் ஒன்றுபட்டு, துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவருக்கொருவர் பெருந்தன்மையையும் பொறுமையையும் பரப்ப வேண்டும் என்ற உன்னத நோக்கில் கொண்டாடப்படும் ‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகப் பெருநாளை கொண்டாடும் அனைத்து இலங்கைவாழ் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் கடந்த காலங்களில் ஏற்பட்ட நீண்ட இக்கட்டான சூழ்நிலையிலும், மக்கா யாத்திரைக்கு சென்று நபிமார்கள் அவர்களின் வாழ்வில் செய்த அளவற்ற தியாகங்களை நினைந்து ஒன்றாகக் இந்நாளை கொண்டாடுகிறீர்கள். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் யாத்திரீகர்கள் வருடாந்த ஹஜ் யாத்திரைக்காக மக்கா நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒன்றுகூடுவது முழு உலக முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றமை உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்கள் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் மகிழ்ச்சியானதாக அமையட்டும்.
மஹிந்த யாப்பா அபேவர்தன,
சபாநாயகர்,
இலங்கைப் பாராளுமன்றம்.