தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்!

தமிழக காவல்துறையின் டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்தது. காவல்துறையில் உள்ள பல்வேறு உயர் அதிகாரிகளின் பெயர்கள் அடுத்த டிஜிபிக்கான ரேஸில் அடிப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலதம் அல்மோராவை சேர்ந்தவர். இவர் உளவுப்பிரிவு டிஐஜி, ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

மன்னார்குடியில் காவல்துறை உதவி ஆணையராக பணியை தொடங்கிய சங்கர் ஜிவால் 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் ஆவார். கடந்த 2021 ஆம் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்து வந்தார் சங்கர் ஜிவால். சங்கர் ஜிவால் தனது சிறப்பு பணிக்காக இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றுள்ளார்.

மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகரின் 109 வது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் ராய் ரத்தோர் 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.