உலகெங்கிலும் பரந்து வாழும் இஸ்லாமியர்கள் இன்று தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்றி ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.
சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்ற அம்சங்களை கடைபிடித்து வாழவேண்டும் என்பதே மிகுந்த மதிப்புடன் கொண்டாடப்படும் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் எமக்கு வழங்கும் முக்கிய செய்தியாகும்.
இந்த ஆன்மீக பெறுமானங்களினால் இலங்கை சமூகத்தை மென்மேலும் வளப்படுத்தி, குறுகிய வேறுபாடுகளை களைந்து அனைவரும் நட்புறவுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ இந்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உறுதிபூணுவோம்.
தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு