ஹஜ் யாத்திரை இஸ்லாத்தின் கட்டாய மத நடைமுறையின் நிறைவைக் குறிக்கின்றது. ஹஜ் என்பது ‘புனித இடத்திற்குச் செல்வதற்கான’ அரபு மொழியாகும். அமைதி மற்றும் சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்ட அனைத்து இஸ்லாமிய யாத்திரிகர்களின் உலகளாவிய கூட்டம் என இதனைக் குறிப்பிடலாம்.
ஹஜ்ஜின் சமயச் சடங்குகளில் பங்குபெறும் இச்சந்தர்ப்பத்தில் உடல், ஆன்மிகம் மற்றும் பொருளாதார ரீதியாக ஆரோக்கியமாகவுள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் பெருமிதமடைகின்றேன். இஸ்லாத்தின் ஐந்து தூண்களான நம்பிக்கை, நோன்பு, ஏழைகள் மீது இரக்கம் காட்டுதல், பிரார்த்தனை மற்றும் புனித யாத்திரை ஆகியவை எவ்வாறு மனிதகுலத்திற்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான உன்னதமான உறவுகளை நிரூபிக்க ஒன்றிணைகின்றன என்பதை எடுத்துக்காட்டும் ஒரு முக்கியமான சந்தர்ப்பம் இதுவாகும். ஹஜ் பண்டிகையானது சிக்கலான உலகில் மனிதர்களுக்கு இடையேயான பிணைப்பை எடுத்துக்காட்டுகின்றது.
உலகம் முழுவதிலுமிருந்தும் வரும் இஸ்லாமிய யாத்திரிகர்களின் இனம் அல்லது குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் இறைவனைப் போற்றும் இப் பண்டிகை, ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களுடன் அமைதியாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கான ஒரு பாடம் என நான் நம்புகின்றேன்.
அனைத்து முஸ்லிம்களுக்கும், குறிப்பாக மனிதர்களிடையே சமத்துவம் என்ற செய்தியுடன் புனித நகரமான மக்காவிற்கு ஹஜ் யாத்திரையில் பங்கேற்பவர்களுக்கு ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துக்கள். இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்.