ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
துணிவு படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித் குமார். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
“என்னை Belt எடுத்துட்டு துரத்துனாங்க” பாக்கியராஜ் பேச்சு!
அஜித் ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விடாமுயற்சி படப்பிடிப்பு மே மாதமே துவங்கும் என்றார்கள். ஆனால் இதுவரை துவங்கவில்லை. இதற்கிடையே விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக வேறு வதந்தி பரவி அடங்கியது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
படப்பிடிப்பை துவங்க தாமதமானதால் தன் ஸ்போர்ட்ஸ் வைக்கில் ரைடு கிளம்பினார் அஜித். அவர் நேபாளம், சிக்கிமுக்கு சென்றுவிட்டு வந்தார். அப்பொழுது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
அதில் ஒரு புகைப்படத்தில் அஜித் குண்டாக இருந்ததை பார்த்து சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள். இந்நிலையில் விடாமுயற்சி படத்திற்காக அஜித் தன் எடையை குறைத்து ஃபிட்டாகப் போகிறார் என்றார்கள்.
அஜித் இப்படி இருக்கும்போது எப்படி ஃபிட்டாக முடியும் என விமர்சித்தார்கள். இந்நிலையில் தான் தன் எடைய வெகுவாக குறைத்து பழைபடி மாறியிருக்கிறார்.
அவர் ஷார்ட்ர்ஸ், டி சர்ட்டில் செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் வியந்துவிட்டார்கள்.
அஜித் குமார் அதற்குள் இப்படி ஸ்லிம்மாகிவிட்டாரா. பலே ஆளு தான் அஜித். அவரை இப்படி பார்க்கத் தான் சந்தோஷமாக இருக்கிறது. இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க ஏ.கே. என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே விடாமுயற்சி படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு நவம்பர் மாதம் தன் பைக்கில் உலக டூர் செல்ல திட்டமிட்டார் அஜித். ஆனால் படப்பிடிப்பே இன்னும் துவங்காததால் அவரின் உலக டூர் திட்டம் என்னவாகும் என தெரியவில்லை.
Arjun: அர்ஜுன் மகளும், தம்பி ராமையா மகனும் யாரால் சந்தித்து காதலிச்சாங்கனு தெரியுமா?
ஜூன் இரண்டாம் வாரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் படப்பிடிப்பு துவங்கும். அஜித்தை வைத்து சண்டை காட்சியை முதலில் படமாக்குகிறார் மகிழ்திருமேனி என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
சிறுத்தை சிவா, ஹெச். வினோத் ஆகியோர் தான் அப்டேட் கொடுக்காமல் இருந்தார்கள் என்றால் இந்த மகிழ்திருமேனியும் அவர்களை போன்றே இருக்கிறாரே என அஜித் குமார் ரசிகர்கள் நொந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் விரைவில் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. விடாமுயற்சிக்காக அவர் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறாரா, இல்லை பைக் ரைடிங்கா என தெரியவில்லையே என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
முன்னதாக துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே. 62 படத்தில் நடிக்கவிருந்தார் அஜித். ஆனால் படப்பிடிப்பு துவங்க வேண்டிய நேரத்தில் விக்னேஷ் சிவனின் கதை பிடிக்கவில்லை என்று அவரை நீக்கினார்கள். அதன் பிறகே மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்தார்கள்.
உதயநிதி ஸ்டாலினை வைத்து மீண்டும் படம் இயக்க ஆசைப்பட்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தை அணுகினார் மகிழ்திருமேனி. உதயநிதி நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் என்று கூறி அவரை லைகாவிடம் பரிந்துரை செய்தது ரெட் ஜெயண்ட் மூவீஸ். அப்படித் தான் அஜித் பட வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு கிடைத்தது.