வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :அவசர வழக்குகள் விசாரணை தொடர்பான புதிய நடைமுறையை உச்ச நீதிமன்றம் அறிமுகம் செய்கிறது.சில நேரங்களில் வழக்குகளின் தன்மைக்கேற்ப, அவற்றை அவசரமாக விசாரிக்கும்படி, வழக்கறிஞர்கள் கோரிக்கை வைப்பர்.
இது தொடர்பாக புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:புதிய வழக்குகளில், சனி, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பதிவு செய்யப்படும் அவசர வழக்குகள், அதற்கடுத்த திங்கள்கிழமை விசாரிக்கப்படும்.
இதுபோல, புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பதிவு செய்யப்படும் வழக்குகள், அடுத்த வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும்.இந்த புதிய நடைமுறை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், வரும், ஜூலை, 3ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
அடுத்த நாள் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவோர், மாலை 3:00 மணிக்குள் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதுபோல, அன்றைய தினமே விசாரிக்க வேண்டும் என்று விரும்புவோர், காலை 10:30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.ஏற்கனவே, ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்ட மற்றும் விசாரணையில் உள்ள வழக்குகளை, அவசரமாக விசாரிக்க விரும்புவோர், அதற்கான தகுந்த காரணங்களுடன், உரிய அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement