ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 110cc ஸ்போர்ட்டிவ் டியோ ஸ்கூட்டர் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
2023 Honda Dio 110
ஹோண்டா நிறுவனம் புதிதாக மேம்பட்ட நிறங்கள் மற்றும் எச் ஸ்மார்ட் எனப்படுகின்ற ரிமோட் கன்ட்ரோல் வசதி பெற்ற கீ கொண்டு அலாய் வீல் பெற்றதாக வந்துள்ளது. தொடர்ந்து டிரம் பிரேக் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. டியோ ஏர்-கூல்டு, 109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 7.8hp மற்றும் 5,250rpm-ல் 9Nm டார்க் வழங்கும். கூடுதலாக OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக விளங்குகின்றது.
அன்டர் போன் ஃபிரேம் கொண்டுள்ள டியோ 110 ஸ்கூட்டர் மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் யூனிட் ஸ்விங் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரின் பரிமாணங்கள் நீளம் 1808 மிமீ, அகலம் 723 மிமீ மற்றும் உயரம் 1150 மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1260 மிமீ பெற்று 160 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாக உள்ளது.
இருக்கை நீளம் 650 மிமீ மற்றும் 5.3 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்று, 103 கிலோ எடை கொண்டது. முன்பக்கத்தில் 130 மிமீ டிரம் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது ஹோண்டா டியோ 110 ஸ்கூட்டரில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக மட்டும் வருகிறது.
டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள பைக்கில் முன்புறத்தில் 90/90-12 54J மற்றும் பின்புறத்தில் 90/100-10 53J டயர் உள்ளது. தற்பொழுது டியோ மாடல் H-smart வேரியண்டில் மேட் சங்ரியா ரெட் மெட்டாலிக், மேட் டார்க் நீலம் மற்றும் இக்னியஸ் கருப்பு , இரண்டாவது டீலக்ஸ் வேரியண்ட்
மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மெட்டாலிக் மஞ்சள் மற்றும் மேட் சங்ரியா ரெட் மெட்டாலிக், இறுதியாக, ஸ்போர்ட்ஸ் ரெட், ப்ளூ மெட்டாலிக் மற்றும் கிரே மெட்டாலிக் என 7 நிறங்கள் உள்ளது.
2023 ஹோண்டா டியோ விலை
DIO STD-OBD2 Rs.76,003
DIO DLX-OBD2 Rs.80,004
DIO SMART-OBD2 Rs.83,504
(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)
H-Smart எனப்படுகின்ற கீலெஸ் ரிமோட் வசதி மூலம் கீழே வழங்கப்பட்டுள்ள வசதிகள் கிடைக்கும்.
ஸ்மார்ட் ஃபைண்ட் – ஸ்கூட்டரை கண்டுபிடிக்கும் வகையில் நான்கு இண்டிகேட்டர்களும் ஒளிரும், ஸ்கூட்டரிலிருந்து 10 மீட்டருக்குள் இருந்தால், வாகனத்தின் இருப்பிடத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் அன்லாக் – டியோ 110 ஸ்கூட்டரிலிருந்து இரண்டு மீட்டருக்குள் இருந்தால், கைப்பிடியை லாக் திறக்கலாம், மேலும் பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் இருக்கையையும் திறக்கலாம்.
ஸ்மார்ட் சேஃப் – டியோ ஸ்கூட்டரில் இருந்து இரண்டு மீட்டருக்குள் இருப்பதால் உங்கள் ஸ்கூட்டரை இயக்கலாம். தூரம் அதிகரிக்கும் பொழுது ஸ்கூட்டர் தானாகவே பூட்டிக் கொள்ளும், ஒருவேளை ஸ்கூட்டரை லாக் செய்ய வேண்டும் என்றால் மூன்று வினாடிகளுக்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த அம்சத்தையும் செயல்படுத்தலாம்.
ஸ்மார்ட் ஸ்டார்ட் – கீ இல்லாமல் டியோ ஸ்கூட்டரை ஆன் செய்ய, ஸ்டார்ட் பட்டனை அழுத்தினால் போதும்.
ஹோண்டா டியோ 110 நுட்பவிரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 47.000 x 63.121 mm |
Displacement (cc) | 109.51 cc |
Compression ratio | 10.0:1 |
அதிகபட்ச பவர் | 7.8 hp (5.8 Kw) at 8000 rpm |
அதிகபட்ச டார்க் | 9.03 Nm at 5,250 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | அண்டர் போன் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
கிளட்ச் | டிரை டைப் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | யூனிட் ஸ்விங் |
பிரேக் | |
முன்புறம் | டிரம் 130 mm |
பின்புறம் | டிரம் 130 mm (with CBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 90/90-12 54J ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 90/90-10 53J ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-3Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1808 mm |
அகலம் | 723 mm |
உயரம் | 1150 mm |
வீல்பேஸ் | 1260 mm |
இருக்கை உயரம் | 765 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 160 mm |
எரிபொருள் கொள்ளளவு | 5.3 litres |
எடை (Kerb) | 103 kg (Drum) |
ஹோண்டா நிறங்கள்
2023 Honda Dio 110 on-Road Price Tamil Nadu
2023 ஹோண்டா டியோ 110 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- DIO STD-OBD2 Rs.92,670
- DIO DLX-OBD2 Rs.97,780
- DIO SMART-OBD2 Rs. 1,01,350
(All Price On-road Tamil Nadu)
- DIO STD-OBD2 Rs.84,789
- DIO DLX-OBD2 Rs. 88,650
- DIO SMART-OBD2 Rs.92,670
(All Price on-road Pondicherry)
2023 Honda Dio 110 Rivals
டியோ ஸ்கூட்டருக்கு நேரடியான போட்டியாளர்களில் ஹீரோ ஜூம் 110 உள்ள நிலையில், அடுத்தப்படியாக, ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ பிளெஷர்+ மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் போன்ற மாடல்கள் உள்ளன.
ஹோண்டா டியோ vs ஜூம் 110 – ஒப்பீடு
Faq ஹோண்டா டியோ 110
2023 ஹோண்டா டியோ 110 ஸ்கூட்டர் மைலேஜ் எவ்வளவு ?
110சிசி என்ஜின் கொண்ட ஹோண்டா Dio 110 மைலேஜ் லிட்டருக்கு 48 Kmpl எதிர்பார்க்கலாம்.
ஹோண்டா டியோ 110 என்ஜின் பவர் & டார்க் ?
109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7.8hp மற்றும் 9Nm டார்க் வழங்கும்.