வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ‛‛டைட்டானிக்” கப்பலை பார்க்க சென்ற போது நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறி உயிரிழந்த 5 தொழிலதிபர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 1912ம் ஆண்டு பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகள், கடனா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் மூழ்கிக் கிடக்கிறது. ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இதற்காக ‛டைட்டன்’ என்ற சிறப்பு நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு பைலர் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்தப் பயணத்திற்கு 2 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி 5 தொழில் அதிபர்கள் பார்வையிட சென்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நீர்மூழ்கிக் கப்பல் அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியது.
இதில் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஹமீஸ் ஹர்டிங்(58) பால் ஹென்றி நார்கோயலட்(77), ஸ்டாக்டன் ருஷ்(61) மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஷஜாதா தாவூத்(48), இவரது மகன் சுலேமான் தாவூத்(19) ஆகியோரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க கடற்படை கூறியிருப்பதாவது:
நேற்று (ஜூன்28ம் தேதி) டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் பல மீட்கப்பட்டது. இதனையடுத்து கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் மாகாணத்தின் செயின்ட் ஜான்ஸ் கடற்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் கிரேன் மூலம் வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டன. இவ்வாறு அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.
இது கடற்படை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,
அட்லாண்டிக் கடலில் ஆயிரத்து 600 அடி ஆழத்தில் இருந்த மீட்கப்பட்ட சிதைந்த பாகங்களை அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது தான் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கான காரணம் தெரியவரும். மேலும் நீர்மூழ்கிக் கப்பல் ஏன் வெடித்தது என்பதற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர் எனக் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement