Indian 2: இந்தியன் 2 ரிலீஸ் தேதி & இந்தியன் 3 அறிவிப்பு..உதயநிதி கொடுத்த வெறித்தனமான அப்டேட்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு புது உத்வேகம் பெற்றுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார்
கமல்
.

அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பல காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து விக்ரம் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து மீண்டும் இந்தியன் 2 படத்தை தூசி தட்டி துவங்கியுள்ளார் கமல். தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்தியன் 2 ரிலீஸ்

மேலும் இப்படத்தை லைகாவுடன் இணைந்து உதயநிதி தயாரித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை போட்டுப்பார்த்த கமல் முழு திருப்தியுடன் இருக்கிறாராம். படம் சிறப்பாக வந்திருப்பதால் இயக்குனர் ஷங்கருக்கு விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் கமல்.

Maamannan review: மாமன்னன் விமர்சனம்..வெற்றியுடன் விடைபெற்றாரா உதயநிதி ?

இதைத்தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படம் வெளியான பிறகு பல வசூல் சாதனைகளை செய்யும் என தெரிகின்றது. இந்நிலையில் உதயநிதி தற்போது மாமன்னன் பட ப்ரோமோஷன்களில் பிசியாக இருந்து வருகின்றார். பல பேட்டிகளில் கலந்து வரும் உதயநிதி ஒரு பேட்டியில் கமலின் இந்தியன் 2 படத்தை பற்றி பேசியுள்ளார்.

உதயநிதி கொடுத்த அப்டேட்

அவர் பேசியதாவது, இந்தியன் 2 படத்திற்காக நிறைய காட்சிகளை இயக்குனர் ஷங்கர் எடுத்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது. இன்னும் 25 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடக்க இருக்கின்றது. அதை முடித்துவிட்டு 2024 ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார் உதயநிதி.

https://news.google.com/publications/CAAqBwgKMPOGqQsw5ZHBAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

மேலும் இந்தியன் 2 படத்தின் வெற்றியை பொறுத்து இந்தியன் 3 உருவாகும் வாய்ப்பும் அமையும் என கூறியுள்ளார் உதயநிதி. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடிக்கும் KH 234 படத்தையும் தயாரிக்கவுள்ளார் உதயநிதி. இப்படம் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என உதயநிதி கூறியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியன் 2 திரைப்படம் வெளியான பின்னர் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.