சென்னை: மாமன்னன் படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷ் பார்த்த நிலையில் மீடியாவுக்கு அளித்த பேட்டியில் உதயநிதி இனிமே நடிக்க வாய்ப்பில்லை ராஜா என மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டார்.
பன்றிக் குட்டிகளுடன் ஓபனிங் சீனில் உதயநிதியை காட்டுவதில் தொடங்கி பன்றிக்கு றெக்கை முளைத்தால் எந்த பிரச்சனையுமே என சொல்லும் அரசியல் வசனம் என பல படங்களுக்கு வெகுஜன மக்களின் அபிமானத்தை பெற அதிகமாகவே சினிமா அரசியல் செய்துள்ளார்.
இந்த ஒரு படத்திலேயே எல்லாத்தையும் திருத்தி விட முடியாது. இது ஒரு முயற்சி என பேசிய உதயநிதி ஸ்டாலின் அடுத்த ஷோவுக்கு டைம் ஆகுது என நகர்ந்து செல்லும் காட்சிகள் தற்போது தீயாக பரவி வருகின்றன.
மகிழ்ச்சியில் மாமன்னன் படக்குழு: இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக கிளம்பிய அதிருப்தி அலை மாமன்னன் படத்தின் ரிலீசுக்கு பிறகு பெருவாரியாக ஓய்ந்துள்ளது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், படக்குழுவுடன் தியேட்டரில் படம் பார்த்து ஹேப்பி ஆகி உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் படம் முடிந்த பின்னர் மீடியாவுக்கு கொடுத்த பேட்டி இணையத்தில் வெளியாகி உள்ளது.
இனிமேல் நடிக்க வாய்ப்பில்லை ராஜா: மாமன்னன் படமே தனது நடிப்பு ஆசையை பூர்த்தி செய்து விட்டதாகவும். இதுதான் தனது கடைசி படம் என்றும் இனிமேல் நடிக்க வாய்ப்பில்லை ராஜா என சொல்லிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.
ஏஞ்சல் படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் நிலை அப்போ அவ்ளோதான் போல என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஒரு படத்தில் திருத்த முடியாது: மாமன்னன் எனும் ஒரே படத்தில் ஒட்டுமொத்த சாதிய வெறியையும் மாற்ற முடியாது என்றும் மக்கள் மனதளவில் மாறினால் தான் இதற்கு தீர்வு வரும். அதற்கு எங்கள் கட்சி எப்போதும் துணையாக நிற்கும் என உதயநிதி ஸ்டாலின் பேசி விட்டு நகர்ந்தார்.
கீர்த்தி சுரேஷ் பளிச்: மாரி செல்வராஜ் என்ன சொல்ல நினைத்தாரோ அதை திரையில் காட்டி விட்டார். இது அவருக்கு கிடைத்த வெற்றி. வடிவேலு சார், உதய் சார், பகத் சார் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர் என கீர்த்தி சுரேஷும் பளிச்சென பேசி உள்ளார்.