Maamannan: மாமன்னன் படத்தால் வைரலாகும் முன்னாள் சபாநாயகர் தனபால் – பின்னணி என்ன?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் எனப்ட பலரும் நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

மாமன்னன்

படத்தை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் முன்னாள் சபாநாயகர் தனபாலை குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். யார் இந்த தனபால்?

தனபாலைப் பொறுத்தவரை அதிமுக கட்சியில் 1977, 1980,1984, 2001, 2011, 2016, 2021 ஆகிய ஏழு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். நாமக்கல், சேலம், திருப்பூர் என கொங்குப் பகுதி மாவட்டங்களில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு அவற்றில், 1977, 1980,1984, 2001 ஆகிய வருடங்களில் நடந்த தேர்தல்களில் சங்ககிரி தொகுதியிலிருந்தும் 2011-ல் ராசிபுரம் தொகுதியிலிருந்தும், 2016 மற்றும் 2021-ல் அவிநாசி தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

சபாநாயகர் தனபால்

1989-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க – ஜெ அணியின் சார்பில் போட்டியிட்டு சங்ககிரி தொகுதியில் தோல்வியைத் தழுவியிருக்கிறார் தனபால். இவருக்கு 1991 மற்றும்1996 ஆகிய இரண்டு தேர்தல்களில் கட்சியிலிருந்து வாய்ப்பளிக்கப்படவில்லை. இவர், உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011-ல் ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றபிறகு, துணை சபாநாயகராக இருந்தார். பின்னர், 2012-ல் சபாநாயகரானார். தமிழக சட்டமன்றத்தின் மதிப்புக்க பொறுப்பான சபாநாயகராக பதவி வகித்த முதல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் தனபால். மாமன்னன் படத்தின் கதையும் சேலம் மாவட்ட அரசியலைப் பேசுவதால் பலரும் இவரைப் பற்றி தகவல்களை சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.