ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உதயநிதியின் மாமன்னன் திரைப்படம் திரையில் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் என அழுத்தமான படங்களாக கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் வடிவேலு மிகமுக்கியமான ரோலில் நடித்துள்ளார். சொல்லப்போனால் வடிவேலுவும் மாமன்னன் படத்தில் ஒரு ஹீரோதானாம். பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு முதல்முறையாக அழுத்தமான ரோலில் நடிப்பதால் மாமன்னன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
வெளியான மாமன்னன்
தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இசக்கி என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு தான் மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டதாக பேசப்பட்டு வருகின்றது. இது தவிர இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் ஆகியோரும் நடித்துள்ளனர்.
Maamannan review: வெற்றியுடன் விடைபெற்றாரா உதயநிதி ? வெளியான மாமன்னன் படத்தின் விமர்சனம்..!
இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது. இதுவரை படம் பார்த்த ரசிகர்கள் பொதுவாக பாசிட்டிவான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். ஆனாலும் படத்தில் ஏதோ ஒரு விஷயம் குறைவதாகவும் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
மாரி செல்வராஜின் படங்களில் இருக்கும் அனைத்து விஷயங்களும் மாமன்னன் படத்திலும் இடம்பெற்றுள்ளதாம். ஆனாலும் படத்தில் எமோஷனல் கனக்ட் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் கூறி வருகின்றனர். இந்நிலையில் மாமன்னன் படத்தில் பல சிறப்பான விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மிரட்டிய மாரி செல்வராஜ்
படத்தில்
உதயநிதி
, வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் போட்டிபோட்டு நடித்துள்ளார்கள். குறிப்பாக வடிவேலுவின் நடிப்பு ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்குமாம். மேலும் ஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்தின் காட்சிகளை அடுத்த லெவலுக்கு கொண்டுபோவதாக அமைந்துள்ளதாம். குறிப்பாக படத்தின் இன்டெர்வல் பிளாக் வேற லெவெலில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
மாமன்னன் படத்தின் இண்டெர்வெல் பிளாக் திரையரங்கை அதிரவைக்கும் வகையில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் என்னதான் மாமன்னன் திரைப்படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பும்படி இப்படம் அமைந்துள்ளதால் கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.