சென்னை: Maamannan (மாமன்னன்) வடிவேலு பாடும் காட்சியுடன் மாமன்னன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கி சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்திய மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின், லால் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
உதயநிதிக்கு கடைசி படம்: விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக மாறி பின்னர் நடிகராக மாறிய உதயநிதி ஸ்டாலினுக்கு அண்மையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனையொட்டி நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்த அவர் மாமன்னன் தான் கடைசி படம் என அறிவித்திருந்தார்.எனவே அவரது கடைசி படமான மாமன்னன் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது.
இன்று ரிலீஸ்: உதயநிதியின் கடைசி படம், வடிவேலுவின் செகண்ட் இன்னிங்ஸ், மாரி செல்வராஜ் படைப்பு, புது கூட்டணியுடன் கைகோர்த்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் என எக்கச்சக்க விஷயங்களோடு படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ரசிகர்களும் ஆவலுடன் டிக்கெட்டை புக் செய்து திரையரங்குக்கு காலை முதல் படை எடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
எப்படி இருக்கிறது படம்: படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்துவருகின்றனர். குறிப்பாக வடிவேலுவின் நடிப்பை ஏகத்துக்கும் புகழ்ந்துவருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மாமன்னன் படத்தை பார்த்து இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் காட்சியிலேயே பாஸிட்டிவ் விமர்சனம் கிடைத்திருப்பதால் போகப்போக படம் நன்றாகவே பிக்கப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேக்கிங் வீடியோ: இதற்கிடையே படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. மேக்கிங் வீடியோவோடு படத்தில் வடிவேலு கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா என்ற பாடலை முழுதாக பாடல் காட்சியும் ஆங்காங்கே வந்து போகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வடிவேலுவின் குரலை, அவரது முக பாவனைகளையும் கொண்டாடிவருகின்றனர்.மேலும் அந்த வீடியோவை இணையத்தில் ட்ரெண்டாக்கியும்வருகின்றனர்.