Maanannan review: மாமன்னன் படத்தை பார்த்த முதலமைச்சர்..என்ன சொன்னார் தெரியுமா? வெளியான முதல்வரின் விமர்சனம்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-

​எதிர்பார்ப்பில் மாமன்னன்உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாமன்னன் திரைப்படமே உதயநிதி நடிக்கும் கடைசி படம் என்பதாலும் , மாரி செல்வராஜின் இயக்கத்தில் இப்படம் உருவாவதாலும் படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. பரியேறும் பெருமாள் , கர்ணன் படத்தை போல இப்படமும் அழுத்தமான கதைக்களத்தை கொண்ட படமாக ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது

​அமோகமான ஓப்பனிங்மாமன்னன் திரைப்படம் துவங்கிய நாளில் இருந்தே இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. குறிப்பாக இப்படத்தில் வடிவேலு நகைச்சுவை நடிகராக நடிக்காமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் வித்யாசமாக நடித்துள்ளார் என்று வந்த தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. மேலும் மாமன்னன் படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது. இவையெல்லாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியது. இதன் காரணமாக படத்தின் ப்ரீ புக்கிங் அமோகமாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட ப்ரீ புக்கிங்கின் மூலமே இப்படம் ஐந்து கோடி வரை வசூலித்துள்ளது. உதயநிதி நடித்த படங்களிலேயே அதிக வசூலை பெரும் படமாக மாமன்னன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

​சர்ச்சைகள்மாமன்னன் படத்திற்கு எந்தளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கின்றதோ அதே போல எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் இருந்து வருகின்றது. மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மாரி செல்வராஜ் , கமல் முன்பே அவரின் தேவர் மகன் படத்தை விமர்சித்தார். இது கமல் ரசிகர்களை சீண்டவே அவர்கள் இணையத்தில் மாரி செல்வராஜை விளாசி வருகின்றனர். தொடர்ந்து மாரி செல்வராஜை கமல் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் தேனியில் மாமன்னன் படத்தை வெளியிட கூடாது , அப்படி வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என ஒரு கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு மாமன்னன் படத்திற்கு ஒருபக்கம் எதிர்பார்ப்புகள் இருந்து வர மறுபக்கம் சர்ச்சைகளும் இருக்கின்றன

​முதலமைச்சரின் விமர்சனம்இந்நிலையில் இன்று மாமன்னன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் நேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் மாமன்னன் படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் என்ன சொன்னார் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மரியாதை கலந்த நன்றியையும் பிரியத்தையும் சமர்ப்பிக்கின்றோம் என பதிவிட்டுள்ளார் மாரி செல்வராஜ். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் படத்தை பார்த்து பாராட்டியதை அடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.