மூணாறு:கேரள மாநிலம் மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான சிட்டி வாரை எஸ்டேட் நார்த் டிவிஷனைச் சேர்ந்தவர் மணிகண்டன் 47.
இவர் கடந்த ஜன., 11ல் இறந்தார். கழிப்பறையில் விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், கழிப்பறையில் விழுந்து இடுப்பு எழும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. மூணாறு போலீசார் விசாரித்தபோது மரம் விழுந்து இறந்தது தெரிந்தது.
போலீசார் கூறியதாவது:
சம்பவத்தன்று மணிகண்டன் மற்றும் அவரது சகோதரியின் கணவர் விஜயகுமார், 44, மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, விஜயகுமார் வெட்டிய மரம் எதிர்பாராத விதமாக மணிகண்டன் மீது விழுந்ததில் அவர் இறந்தார். அதனை மறைத்து, கழிப்பறையில் விழுந்ததாக நாடகமாடினர்.
இவ்வாறு கூறினர்.
இதையடுத்து, சம்பவம் நடந்து, ஐந்து மாதத்திற்கு பின் விஜயகுமாரை நேற்று கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement