Asia Cup 2023: ஆசிய கோப்பைக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், போட்டியின் அமைப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. கடந்தாண்டு ஆசிய கோப்பை டி20 வடிவில் நடத்தப்பட்ட நிலையில், இம்முறை ஒருநாள் போட்டி வடிவில் நடத்தப்படுகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
கடைசியாக 2018இல் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, இந்த முறையும் கோப்பையை வெல்ல ஆர்வமாக உள்ளது. ஆனால், குறிப்பிட்ட வீரர்கள் கிடைப்பதில் பெரிய கேள்விக்குறிகள் எஞ்சியிருப்பதால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பணி எளிதானது அல்ல. ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் தங்கள் காயங்களுக்கு சிகிச்சையில் உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ரிசர்வ் பிளேயராக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய உத்தேச அணியை இதில் காணலாம்.
தொடக்க ஆட்டக்காரர்கள்: ரோஹித் சர்மா, சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட்
ரோஹித் சர்மா, சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்குவாடில் இருப்பார்கள். சுப்மான் கில்லின் அடுத்தகட்ட கேரியர் வேகப்பந்து வீச்சை அவர் எதிர்கொள்ளும் விதத்தில் உள்ளது. அவர் சமீப காலங்களில் ரன்களை குவித்துள்ளார். அது டெஸ்ட் வடிவமாக இருந்தாலும் சரி, ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி, டி20 போட்டியாக இருந்தாலும் சரி, தொடக்க ஆட்டக்காரர் என்ற வகையில் ஒரு முறை கூட தவறவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அவருக்கு மிகச்சிறந்ததாக இல்லாவிட்டாலும், அவர் அணியில் ஒரு தொடக்க வீரராக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரோஹித் சர்மாவைப் பொறுத்தவரை, கேப்டனாக இருப்பதால், அவர் சமீபத்திய மாதங்களில் பெரிய பார்மில் இல்லாதபோதிலும் அவர் கழட்டிவிடப்படாமல் இரருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல்லில் ரன்களை குவித்ததால், அணியில் ரிசர்வ் ஓப்பனர் இடத்துக்கு ஏற்றார். வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கான ஆல் ஃபார்மேட் வீரராக அவரைப் பார்க்க பலரும் காத்திருக்கின்றனர். சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும்.
மிடில் ஆர்டர்: விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன்
விராட் கோலி, பெயருக்கு ஏற்ப, அணியின் மிகப்பெரிய தூண்களில் ஒருவர். அடுத்து ஒரு சில வாரங்களில் முழு உடற்தகுதியை மீண்டும் பெறுவார் என எதிர்பார்க்கப்படும் கேஎல் ராகுல். இந்தியாவின் பலவீனமான மிடில் ஆர்டருக்கு வலுசேர்க்க அவர் தான் ஒரே தேர்வு. zeenews.india.com/tamil/sports/shocking-truth-ms-dhoni-go-angry-on-virat-kohli-says-ishant-sharma-451296
சூர்யகுமார் யாதவ் 50 ஓவர் போட்டிகளில் சமீபகாலமாக விளையாடவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் அவர் செய்த அட்டகாசமான ஆட்டங்கள் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதைக் காணலாம். சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் (இருவரும் விக்கெட் கீப்பர்கள்) போன்றவர்கள் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற போதுமான அளவு தங்களது திறனை வெளிக்காட்டியுள்ளனர். அவர்களில் ரிஷப் பந்த் இல்லாத நிலையில் விக்கெட் கீப்பராக யார் இடம் பெறுகிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் என்பதில் சந்தேகமில்லை. பொருத்தமாக இருந்தால் அவர்கள் பிளேயிங் லெவனின் டாப் லிஸ்டில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. அக்சர் படேல் என்பது ஜடேஜாவுக்கு ஆப்ஷன் வீரர் தான்.
வேகப்பந்து வீச்சாளர்கள்: முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
இலங்கையில் உள்ள ஆடுகளங்களின் தன்மையால் இந்திய அணியில் 2க்கும் மேற்பட்ட ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வது கடினமாக இருக்கலாம். ஹர்திக் பாண்டியாவும் வேகப்பந்துவீச்சு றன் கொண்டவராக இருப்பதால், மூன்று சீமர்களை இலங்கை தேசத்திற்கு எடுத்தால் போதுமானது.
முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், அதே நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா ஓரங்கட்டப்பட்டால் உம்ரான் மாலிக்கும் தேர்வு செய்யப்படுவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது.
சுழற்பந்துவீச்சாளர்கள்: யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ்
குறிப்பாக இலங்கையில் காணப்படும் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு குல்தீப் – சாஹல் ஜோடிக்கு வாய்ப்புள்ளது. இருவரும் சேர்ந்து, பழைய மந்திரத்தை மீண்டும் வெளிக்கொண்டு வரலாம்.