இந்தியன் 3 உருவாகிறது

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணி முதன்முதலாக இந்தியன் படத்தில் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர்கள் இணைந்துள்ளார்கள். இந்தியன் 2 படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் மட்டுமே பாக்கி உள்ள நிலையில் தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியன்-2 படத்தின் காட்சிகளை பார்த்து தற்போது கமலும், ஷங்கரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இப்படத்தை வருகிற ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியன்-2 படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான உதயநிதி கூறுகையில், இந்தியன் படத்தின் மூன்றாவது பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் இந்தியன் 2 ரிலீஸாகட்டும் இந்தியன் 3 பற்றி அடுத்து முடிவு செய்யப்படும். இது குறித்த அறிவிப்பு அந்தசமயம் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.