`இனி வேண்டாம்!' கணவனுக்காக விலகிய பிரியங்கா; `சீதா ராமன்’ ஹீரோயினான சசிகுமார் பட நடிகை!

ஜீ தமிழ் சேனலில் சமீபத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய சீரியல் `சீதாராமன்’. சன் டிவியில் வருடக்கணக்கில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த ஹிட் தொடரான `ரோஜா’ சீரியலில் நடித்த பிரியங்காவை அதிக சம்பளம்  கொடுத்து இந்தத் தொடரின் கதாநாயகியாகக் கமிட் செய்தார்கள்.

சீரியலின்  புரோமோவே மில்லியன் பார்வையாளர்களைத் தொட்டது. பிரியங்கா தவிர, ரேஷ்மா, சாக்‌ஷி சிவா, வினோதினி உள்ளிட்ட மேலும் சிலரும் நடிக்க,. டி.ஆர்.பி.யிலும் நல்ல ரேட்டிங் கிடைக்கத் தொடங்கிய சூழலில், தொடரிலிருந்து ஹீரோயின் பிரியங்கா வெளியேறினார்.

இது தொடர்பாக `நீ நடிச்சது போதும்..!’- ஹிட் சீரியலிலிருந்து கண்ணீருடன் வெளியேறும் பிரியங்கா?!காரணம் என்ன? என்கிற தலைப்பில் ஏற்கெனவே முன்கூட்டியே கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

பிரியங்கா

பிரியங்காவுக்கு சீரியலில் நடிக்க வேண்டுமென்பதுதான் விருப்பமென்றும், ஆனால் அவரது கணவருக்கு பிரியங்கா தொடர்ந்து நடிப்பதில் உடன்பாடில்லை.. ‘நான் நல்லா சம்பாதிக்கிறேன். அதனால நீ நடிச்சது போதும்’ என அவர் சொன்னதை பிரியங்காவால் மீற முடியவில்லை எனவும் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

நாம் குறிப்பிட்டதைப் போலவே சில தினங்களுக்கு முன் சீரியலிலிருந்து வெளியேறினார் பிரியங்கா.

சீரியல் விறுவிறுப்படையத் தொடங்கியிருந்த நெரத்தில் பிரியங்கா வெளியேறியதால் அப்போதிலிருந்தே அடுத்த சீதாவாக யார் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு சீரியலின் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டது.

ஆனாலும் சில தினங்கள் சீதாவுக்கான சீன்கள் இல்லாமலே சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இன்னொரு பக்கம் பிரியங்காவின் இடத்துக்கு ஆர்ட்டிஸ்ட் தேடும் படலுமும் சேனலில் நடந்து கொண்டெ இருந்தது.

சீரியல் சினிமா நடிகைகள் பலரது பெயர்கள் பரிசீலனையில் அடிபட்டு வந்த நிலையில், தற்போது நடிகை ஸ்ரீபிரியங்கா அடுத்த சீதாவாகத் தேர்வாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

’பிரியங்காவுக்குப் பதில் ஸ்ரீபிரியங்காவா எப்புட்றா?’ என்கிறீர்களா, இதே சந்தேகத்தை நாமும் கேட்டோம்.

ஸ்ரீ பிரியங்கா

‘சீரியல்கள்ல ’இவருக்குப் பதில் இவர்’னு மாற்றம் நடக்கிற போது பொதுவா ஒரு விஷயத்துல கவனம் செலுத்துவாங்க. அதாவது ஏற்கெனவே நடிச்சிட்டிருந்த நடிகர் நடிகைகளின் சாயல் ஓரளவு பொருந்திப்போகிற மாதிரி இருக்கிற ஆர்ட்டிஸ்டுகளைத்தான் தேடுவாங்க. அப்படி சில மாற்றங்கள் கூட நடந்திருக்கு.. சீரியல் ரசிகர்களைச் சமாதானப்படுத்தும் ஒரு உத்தி இது, ‘பிரியங்கா’வை மாதிரியே ஆர்ட்டிஸ்ட் கிடைக்கலையோ என்னவோ, அவங்க பெயரைக் கொண்ட ஆர்ட்டிஸ்டா செலக்ட் செய்திருக்காங்க’ என்கிறார்கள்.

இந்த ஸ்ரீபிரியங்கா சினிமாவில் நடித்தவர். ’மிக மிக அவசரம்’, ‘கொம்பு வச்ச சிங்கமடா’  உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். ‘மகளிர் காவலர்களின் பிரச்னைகளைப் பேசிய ‘மிக மிக அவசரம்’ படத்தில் இவரின் நடிப்பு பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியான போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி படத்தை மகளிர் காவலர்கள் பார்க்க ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார்.

இவர் சீதா கேரக்டருக்கு ரொம்பவே பொருந்திப் போவார் என்கிறார்கள். ஸ்ரீபிரியங்கா இன்னும் ஓரிரு தினங்களில் சீரியலின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.