தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் (ஜூன் 30) பணி ஓய்வு பெறுகிறார். அரசு அதிகாரியாக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமானவர் இறையன்பு.
மாணவர்களை, இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவரது பேச்சும் எழுத்தும் இருக்கும். அரசு அதிகாரியாக அதை செயலிலும் காட்டிவருகிறார்.
பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை முன்னெடுக்க பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளிக்கு அவர் நேற்று (ஜூன் 29) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், மாணவர்கள் மின்னணு உபகரணங்களில் அதிகமாக வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பொது அறிவு தொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை என்ற தனது வருத்தத்தை பதிவு செய்துதுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இதைப் போக்க முன்னெடுக்க வேண்டிய திட்டம் குறித்தும் குறுப்பிட்டுள்ளார். வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதில் மாதந்தோறும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம் என்றும் கூறியுள்ளார்.
அரசு பேருந்தில் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்கள்!
இதன்மூலம் வாசிப்பு மேம்படுவதுடன் தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்யும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களை தந்து ஊக்குவிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இறையன்பு இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.இந்நிலையில் அவர் கடைசியாக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கிய அறிவுறுத்தல்படி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.