உங்களுக்கு யார் ஷேவ் பண்ணி விடுவா.. ?: ஏடாகூடமான கேள்விக்கு அசராமல் பதிலளித்த பிக்பாஸ் சனம்.!

திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் அவ்வப்போது ரசிகர்களுடன் டாச்சிலே இருப்பதற்காக அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். சில சமயங்களில் நெட்டிசன்கள் ஏடாகூடாமான கேள்விகளை கேட்பார்கள். இதனை பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் கண்டுக்கொள்ளாமல் விடுவார்கள். ஒரு சிலர் தரமான பதிலடி கொடுப்பதும் வழக்கம்.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
அந்த வகையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான சனம் ஷெட்டி நெட்டிசனின் ஏடாகூடமான கேள்விகளுக்கு அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘அம்புலி’ படத்தில் சினிமாவில் அறிமுகமான சனம் ஷெட்டி, மாயை, வெள்ளையாய் இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், டிக்கெட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்தப்படங்கள் பெரிதான வரவேற்பை பெறவில்லை.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். சினிமாவில் கிடைக்காத பிரபலம் இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்தது. சீசன் நான்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சனம் 63 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தார்.

Maamannan:’மாமன்னன்’ படம் இவரைப்பற்றிய நிஜ கதையா.?: தீயாய் பரவும் தகவல்.!

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி #asksanam என்ற ஹேஸ்டாக் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் சில நெட்டிசன்கள் ஏடாகூடாமான கேள்விகளை எழுப்பினார்கள்.

அதில் ஒருத்தர் உங்களுடைய அக்குளுக்கு யார் ஷேவ் பண்ணுவார் என கேட்டிருந்தார். இதற்கு அசராமல் ‘ஜில்லெட்டுனு ஒருத்தர்’ என பதிலடி கொடுத்துள்ளார். மேலும், நீங்கள் வெர்ஜினா என இன்னொரு நெட்டிசன் கேட்க, ‘அதை தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன செய்ய போறீங்க’ என அதிரடியாக ரிப்ளே செய்துள்ளார். சனம் ஷெட்டியின் இந்த பதில்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Captain Miller: ரியல் வெறித்தனம்.. தீயாய் இருக்கு: கேப்டன் மில்லராக மிரட்டும் தனுஷ்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.