சென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
தனுஷின் வெறித்தனமான லுக்கில் உருவாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம்மையாக ரீச் ஆகியுள்ளது.’
வெளியானது கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக்: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர், பீரியட் ஜானரில் ஹை வால்டேஜ் ஆக்ஷன் படமாக உருவாகிறது. இந்த ஹைப்பை இன்னும் எகிற வைக்கும் விதமாக தற்போது கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களாகவே கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்போது கேப்டன் மில்லர் படத்தில் இருந்து தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படுமிரட்டலாக வெளியாகியுள்ள இந்த போஸ்டர், தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது.
கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படம் தனுஷ் கேரியரில் ரியலான சம்பவமாக இருக்கும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பெரியரக துப்பாக்கிய கையில் வைத்துக்கொண்டு நிற்கிறார் தனுஷ். அவரை சுற்றி ஏராளமானோர் உயிரிழந்து கிடக்கின்றனர். ஒரு போர்க்களத்தின் சூழலை பின்னணியாகக் கொண்டு இந்த போஸ்டர் உருவாகியுள்ளது.
முக்கியமாக தனுஷின் கெட்டப் இன்னும் மிரட்டலாக இருக்கிறது. தனுஷை இதுவரை இப்படியொரு கேரக்டரில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை எனலாம். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கேப்டன் மில்லர் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். ஏற்கனவே ராக்கி, சாணிக் காயிதம் படங்களில் ராவான ஆக்சன் காட்சிகளால் ரசிகர்களை கலங்கடித்திருந்தார்.
கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், சுந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே இந்தப் படம் 2023ல் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தாண்டு வெளியாகும் என குறிப்பிட்டிருந்தாலும் ரிலீஸ் தேதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செம்ம வைரலாகி வருகிறது.