வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ஐம்பதுகளிலும் அறுபதுகளின் முற்பகுதியிலும் பிறந்தவர்களுக்கு மனதளவில் மிகவும் நெருங்கியவர்.
என் போன்ற எண்ணற்ற பேரை – பழைய நினைவுகளுடன் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர்.
உலக இசை தினமும் அவரது பிறந்த நாளும் மூன்று நாட்கள் இடைவெளியில் வருவது ஒரு சுவாரஸ்யம். (முறையே ஜுன் 21, 24).
டி. கே. ராமமூர்த்தி அவர்களுடனும் தனியாகவும் இவர் இசை அமைத்த எத்தனையோ பாடல்கள் நம் வாழ்வில் நம்முடன் கலந்து விட்டவை.
1983 வரை தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கமாக இருந்த இலங்கை வானொலி கேட்பவர்களுக்கு தெரியும்.
மேற்கண்ட காலத்தில் பிறந்தவர்களின் அனுபவங்கள் அலாதியானவை. சுத்தமான குடிநீர், காற்று, தோழமையுடனும் உரிமையுடனும் கண்டிக்கும் ஆசிரியர்கள், படிப்பில் சுதந்திரம் தந்த பெற்றோர், எளிய ஆடைகள், செருப்பு (சிலரிடம் செருப்பு அணியும் பழக்கம் இல்லை), மாலையில் விளையாட்டு இத்துடன் பெற்றோர்களின் அரை மனதான ஒப்புதலுடன் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன் என்று அன்றைய ஹீரோக்களின் படங்கள் – பெரும்பாலும் எம் எஸ் விஸ்வநாதன்தான் இசை.
எனவே எம் எஸ் வி எந்த விஷயங்களில் மற்ற இசை அமைப்பாளரிடம் இருந்து மாறுபடுகிறார் என்பது எங்களுக்கு அத்துபடி.
1) நேர்த்தியான இசை – இசை மென்மையாக காதுகளை இம்சைப்படுத்தாது
2) சிச்சுவேஷன் அதாவது பாடல் எந்த சூழ்நிலையில் பாடப்படுகிறது என்பதை இயக்குநரிடம் தெளிவாக தெரிந்து கொண்டு இசை அமைப்பார். அந்த சூழலுக்குத் தக்கவாறு இசையும் மெட்டும் இருக்கும். உதாரணமாக நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் பாடலில் மிடுக்கான போலீஸ் அதிகாரி பாடும் பாடல் என்னும் போது சிவாஜி பாடும் மெட்டை உச்சஸ்தாயியில் மேற்கத்திய பாணியில் அமைத்திருந்தார்
3) பாடல் களம் எம்.எஸ்.வியின் இசையில் மிகவும் முக்கியமானது. திரைப்படத்தை பார்க்காதவர்கள் கூட அப்பாடல் காட்சியை மனக் கண்ணால் காண முடியும். இதை வேறு எந்த இசை அமைப்பாளரின் இசையிலும் நான் கண்டதில்லை.
அக்கதாபாத்திரம் பாடலை படகில் துடுப்பு வலித்துக் கொண்டு பாடுகிறாரா, வாகனம் ஓட்டிக் கொண்டே பாடுகிறாரா, குதிரையில் சவாரி செய்து கொண்டே பாடுகிறாரா, ரயிலில் பாடும் பாடலா, நீச்சல் குளத்தில் பாடுகிறாரா, மலைப்பிரதேசமா, பிறந்த நாள் விழாவா – ஒவ்வொரு பாடல்களத்தையும் நாம் உணரலாம்
(உதாரணங்கள் – அமைதியான நதியினிலே ஓடும், பொங்கும் கடலோசை, இரண்டு கைகள் நான்கானால், சித்திரை மாதம் பெளர்ணமி நேரம், ஜில் என்று காற்று வந்ததோ, பிள்ளைத்தமிழ் பாடுகிறேன், எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், காதல் ராஜ்ஜியம் எனது)
4) பாரின் லொகேஷன் எனப்படும் வெளிநாடுகளில் படமாக்கப்படும் பாடல்களுக்கு இசை அமைப்பதில் எம்.எஸ்.விக்கு நிகர் அவரே
5) இணைப்பிசை ( gap music ) மன்னன் இவர்! இணைப்பிசை மிகவும் சரளமாகவும் மெட்டை ஒட்டியும் இருக்கும். பல்லவிக்கு அடுத்த இணைப்பிசைக்கும் சரணத்திற்கு முந்தைய இணைப்பிசைக்கும் வித்தியாசம் இருக்கும். ரிபீட் இருக்காது.
6) பாடலில் கண்ணன் என்ற வார்த்தை வந்தால் கட்டாயம் புல்லாங்குழல் அப்பாடலில் ஆதிக்கம் செலுத்தும்.
( யமுனா நதி இங்கே)
7) அதே போல் வயல் வெளிகளில் பாடும் பாடல் எனில் புல்லாங்குழல் கட்டாயம் உண்டு
(பொண்ணா இல்லை பூவா)
8) ராமமூர்த்தியுடன் இணைந்து இசை அமைத்த கர்ணன் படத்தில் முழுக்க முழுக்க சரோட், சாரங்கி போன்ற வட இந்திய இசைக் கருவிகளை பயன்படுத்தப்பட்டிருக்கும். (கதைக் களம் வட இந்தியா. வாத்தியங்கள் பிரத்தியேகமாக வரவழைக்கப் பட்டனவாம்)
9) இரவில் பாடப்படும் பாடலையும் இசையிலேயே உணர வைப்பார்
(என்னை விட்டால் யாருமில்லை, இரவுப்பாடகன் ஒருவன் வந்தான், நிலவைப் பார்த்து வானம் சொன்னது, நிலவே என்னிடம் நெருங்காதே)
10) பாத்திரத்தின் உணர்வுகள் இசையிலேயே வெளிப்படும்.
(உதாரணம் : முத்து நகையே உன்னை நானறிவேன், ஒரே பாடல் உன்னை அழைக்கும், இசை கேட்டால் புவி அசைந்தாடும், காதல் மலர் கூட்டம் ஒன்று, சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு, அடி என்னடி ராக்கம்மா.
இந்த ராக்கம்மா பாடல் சோகமாகவும் வரும். பாடல் முடியும் போது பல்லவி ஷெனாய் வாத்தியம் மூலம் வாசிக்கப்படும் போது அப்பாத்திரத்தின் சோகம் அப்பட்டமாக வெளிப்படும்)
11) 1972இல் வெளியான ராஜா திரைப்படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் டைடில் மியூசிக் என்ற பாணியை அறிமுகப்படுத்தியவர்.
துள்ளல் இசையில் எம்.எஸ்.வி இசை அமைத்த பாடல்களும் ஏராளம். நமது மனம் சோர்ந்து போன நேரங்களில் இப்பாடல்களை கேட்கும் போது நம்மை ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். சில உதாரணங்கள்:
* பன்சாயி (உ. சு. வாலிபன்)
* இரண்டில் ஒன்று (ராஜா)
* பொன்மகள் வந்தாள் (சொர்க்கம்)
* பாடும்போது நான் தென்றல் காற்று
* சொர்க்கத்திலே நாம்
அடியெடுத்தோம்
* சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
* கேட்டுக்கோடி உறுமி மேளம்
* மாதவிப்பொன் மயிலாள்
* யாதும் ஊரே யாவரும் கேளிர்
* எங்கேயும் எப்போதும் சங்கீதம்
* வெற்றி மீது வெற்றி வந்து
* நல்லதொரு குடும்பம் பல்கலைக்
கழகம்
* அன்பு மலர்களே (நாளை நமதே)
* என்னைத் தெரியுமா
* மல்லிகை என் மன்னன் மயங்கும்
* புதிய வானம் புதிய பூமி
* ராஜாவின் பார்வை
* பூமாலையில் ஓர் மல்லிகை
* பாடுவோர் பாடினால்
* பாவை யுவராணி
* இயற்கை என்னும் இளைய கன்னி
* மணமேடை மலர்களுடன் தீபம்
* அவள் ஒரு நவரச நாடகம்
* பொட்டு வைத்த முகமோ
* மலைராணி முந்தானை
(நயாகரா நீர் வீழ்ச்சியின்
பிரம்மாண்டத்தை
இசையிலேயே உணர்த்தி
இருப்பார்)
* அன்பு நடமாடும் கலைக்கூடமே
* வான்நிலா நிலா அல்ல
* வசந்த கால நதிகளிலே
* நாதம்
அவரைப் பற்றிய சில நினைவுகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.