ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு பவர்! ரஷ்யா வைக்கும் புது யோசனை.. சக்ஸஸ் ஆனா வேற லெவல்தான்

மாஸ்கோ: அமெரிக்காவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வரும் நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தொடர்பாக ரஷ்யா முக்கிய கோரிக்கை ஒன்று வைத்திருக்கிறது. இந்த கோரிக்கை நிறைவேறினால் இந்தியாவுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூடுதல் பவர் கிடைக்கும்.

சர்வதேச அரசியலில் கடந்த 2000ம் ஆண்டு முதல் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைந்து வருகிறது. அதேபோல சீனா மற்றும் ரஷ்யாவின் கைகள் ஓங்கியுள்ளன. இந்த போக்கை தீவிரப்படுத்தியதில் உக்ரைன் போருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கிழக்கு பக்கம் அமெரிக்கா முன்னேற கூடாது என்று சோவியத் யூனியன் காலத்திலேயே அமெரிக்காவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து சோவியத் உடைந்து அதனுடன் இருந்த சில மாகாணங்கள் தங்களை தனி நாடுகளாக அறிவித்துக்கொண்டன. அப்படிப்பட்ட நாடுகளில் ஒன்றுதான் உக்ரைன். இது மிகவும் வளமிக்க நாடாகும். ரஷ்யாவின் ஒட்டு மொத்த உணவு உற்பத்தியில் ஏறத்தாழ சரிபாதி அளவுக்கு உக்ரைனால் பூர்த்தி செய்துவிட முடியும். மட்டுமல்லாது ரஷ்யாவுக்கு பக்கத்திலேயே இருப்பதால், நேட்டோவில் இது இணைந்துவிட்டால் நேட்டோ படைகள் இந்நாட்டின் எல்லையில் நிலைநிறுத்தப்படும். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல்.

எனவே உக்ரைனுக்கு எதிராக போரை ரஷ்யா அறிவித்தது. இந்த போர் தொடங்கி ஓராண்டு மேலாகியுள்ள நிலையில், ரஷ்யா கணிசமான இடங்களை கைப்பற்றியிருந்தாலும், உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியவில்லை. காரணம் அமெரிக்காவின் உதவிதான். ரஷ்யாவை விட மிகவும் சிறிய நாடாக உள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா ஏராளமான ஆயுத உதவிகளை செய்து வருகிறது. அதாவது இந்தியா ஓராண்டுக்கு தனது ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியில் சுமார் 80 சதவிகிதம் அளவுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு உதவியுள்ளன.

எனவே ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறுவதில் சற்று சிரமம் இருக்கிறது. அதேபோல மறுபுறம் ஐரோப்பிய யூனியனை தூண்டி விட்டு, போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது. எதிர்பார்த்தபடி ஐரோப்பிய யூனியன் தற்போது அமெரிக்காவிடமிருந்து எண்ணெய்யை வாங்க தொடங்கியுள்ளது. இப்படியாக ரஷ்யாவை பலவீனப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கம்.

ஆனால், ரஷ்யா தற்போது ஆசிய நாடுகளுடன் கைக்கோர்த்திருக்கிறது. குறிப்பாக சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவின் முக்கியமான வர்த்தக கூட்டாளிகளாக இருக்கின்றனர். முன்னெப்போதையும் விட சீனா அதிக அளவு கச்சா எண்ணெய்யை வாங்க தொடங்கியுள்ளது. இரு நாடுகளும் தங்கள் நாட்டின் சொந்த நாணயங்களில் வர்த்தகத்தை மேற்கொள்கின்றனர். இந்தியாவும் தற்போது ரஷ்யாவிடம் அதிக அளவு கச்சா எண்ணெய்யை வாங்க தொடங்கியுள்ளது.

நமது நாட்டிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் எனில், சவுதியும், ஈராக்கும்தான் என்றிருந்த நிலைமை மாறி தற்போது ரஷ்யா முதலிடத்தை பிடித்திருக்கிறது. இது ரஷ்யாவுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. ஆசிய நாடுகளுடன் ரஷ்யாவின் கைக்கோர்ப்பு அமெரிக்க டாலரின் மதிப்பை வேகமாக குறைத்து வருகிறது. அமெரிக்கா எதிர்பார்த்தது ஒன்று, ஆனால் நடப்பது வேறு ஒன்றாக இருப்பதால், அது வெறுமென கைக்கட்டிக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஏனெனில் இந்த முறை அமெரிக்காவுக்கு உதவ பிரிட்டனால் கூட முடியாது. பிரிட்டனின் பொருளாதாரமே எப்போது விழும் என்கிற நிலைமையில் இருக்கிறது. பிரான்ஸ் உள்ளிட்ட இதர ஐரோப்பிய நாடுகளிலும் ஏறத்தாழ இதேபோன்றுதான் இருக்கிறது. இந்த சூழலை பயன்படுத்தி ஆசிய நாடுகளை பலப்படுத்தும் வேலையில் ரஷ்யா இறங்கியுள்ளது.

அதாவது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளார். பொதுவாக செர்ஜி லாவ்ரோவ் அதிகமாக பேசுபவர் கிடையாது. ஆனால் அவர் ஒரு விஷயம் குறித்து பொது வெளியில் பேசுகிறார் எனில் அதை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சீரியஸாக பார்க்கும்.

அந்த வகையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை நீர்த்துப்போக செய்யும் விதமாக ஆசிய நாடுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செர்ஜி லாவ்ரோவ், “உலகின் பெரும்பான்மையானவர்கள் மேற்கத்திய விதிகளின்படி வாழ விரும்பவில்லை” என்று கூறியுள்ளார் என்பது இதில் கவனிக்கத்தக்கதாகும்.

தற்போது வரை அமெரிக்கா பாதுகாப்பு கவுன்சிலில் 5 நாடுகள்தான் நிரந்தர நாடுகளாக இருக்கிறது. சீனா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள்தான் அவை. இந்நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்கள்தான் சர்வதேச அரசியலை தீர்மானிக்கும். அதேபோல இவர்கள் கொண்டுவரும் தீர்மானத்தை தடை செய்யும் அதிகாரமும் இந்த 5 நாடுகளுக்குதான் இருக்கிறது.

இந்தியாவும் பயங்கரவாதிகள் சிலரை சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்க வேண்டும் என்று அடிக்கடி தீர்மானத்தை கொண்டு வந்தது. ஆனால் இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இல்லாததால் இதை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. தற்போது ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதை போல நடந்தால் இந்தியாவுக்கும் கூடுதல் பவர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.