ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்தியாவில் ஏகப்பட்ட திறமையான பாடகர்கள், பாடகிகள் இருக்கிறார்கள். மேலும் இசையமைப்பாளர்களும் அழகாக பாடுகிறார்கள். பிரபலமாவதற்கு ஏற்ப ஒரு பாடலுக்கு இவ்வளவு என சம்பளம் வாங்குகிறார்கள். இந்நிலையில் தான் இந்தியாவில் ஒரு பாட்டு பாட அதிக சம்ளம் வாங்குவது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் என தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.
கெத்தாக வந்த ரஜினி: ஆர்ப்பரித்த ரசிகர்கள்!
அவர் ஒரு பாட்டு பாட ரூ. 3 கோடி வாங்குகிறாராம். பிற பாடகர்களை விட 10 மடங்கு அதிகம் வாங்குகிறார்.
ஒரு சில பிரபல பாடகர்கள் பாடல் ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் வாங்குகிறார்கள். மற்றவர்களோ பாடலுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வாங்குகிறார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஏ.ஆர். ரஹ்மான் சில நேரங்களில் ஒரு பாடல் பாட ரூ. 5 கோடி கூட வாங்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.
ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கிறார். தன்னை பற்றி ஏதாவது தகவல் வெளியானால் அவரே பதில் அளிக்கிறார். யாராவது தன்னை கலாய்த்தால் கூட நச்சுனு பதில் கொடுக்கிறார். அதனால் இந்த ரூ. 3 கோடி விஷயம் குறித்து ட்விட்டரில் பார்த்தால் ஏ.ஆர்.ரஹ்மான் நிச்சயம் விளக்கம் அளிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
படங்களில் பாட ரூ. 3 கோடி வாங்கும் ஏ.ஆர். ரஹ்மான், இசை நிகழ்ச்சிகளில் பாட ரூ. 1 கோடிக்கு மேல் வாங்குவதாக கூறப்படுகிறது. மேடையில் பாட அதிக சம்பளம் வாங்கும் நபராக இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
ஏ.ஆர். ரஹ்மானை அடுத்து அதிகம் சம்பளம் வாங்குபவர் பாடகி ஸ்ரேயா கோஷல். அவர் ஒரு பாட்டுக்கு ரூ. 25 லட்சம் வாங்குகிறாராம். அவரை அடுத்து சுனிதி சவுகான், ஆர்ஜித் சிங் ஆகியோர் பாட்டு ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் முதல் ரூ. 22 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சோனு நிகம், பாத்ஷா ஆகியோர் ஒரு பாட்டுக்கு ரூ. 18 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை வாங்குகிறார்களாம். ஷான், நேஹா, ஹனி சிங் ஆகியோர் ஒரு பாட்டு பாட ரூ. 10 லட்சம் கேட்கிறார்களாம்.
ஏ.ஆர். ரஹ்மான் கோடிகளில் சம்பளம் கேட்பதில் தவறு எதுவும் இல்லை. அவர் ஆஸ்கர் நாயகன். மேலும் அவர் எந்த பாட்டு பாடினாலும் அது ஹிட்டாகிவிடும். அப்படி இருக்கும் போது ரஹ்மானுக்கு ஒரு பாட்டுக்கு ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி கொடுப்பது சரி தான் என்கிறார்கள் இசைப்புயலின் ரசிகர்கள்.
மாமன்னன் விமர்சனம்
இதற்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படம் நேற்று ரிலீஸானது. மாரி செல்வராஜ் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையா என முதலில் ரசிகர்கள் வியந்தார்கள். படம் பார்த்த பிறகு ரஹ்மான் ஒரு ஜீனியஸ். எந்த இயக்குநருக்கும் ஏற்றபடி இசையமைக்கிறார் என ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய ராசாக் கண்ணு பாடல் சூப்பர் ஹிட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.