கோபேஷ்வர்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் சின்கா அருகே புதன்கிழமை இரவு முதல் கனமழை தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பத்ரிநாத் நெடுஞ்சாலையில் நேற்று போக்குவரத்து தடைபட்டது. இதனால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலை சென்றடைய முடியாமல் நடுவழியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
குறிப்பாக, இதில் பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் செல்லும் பக்தர்களும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலைகளில் உள்ள இடிபாடுகளை அகற்றும் பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், விரைவில் இந்த சாலையில் போக்குவரத்து சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடுவழியில் சிக்கித் தவிக்கும் பக்தர்களுக்கு சமோலி நிர்வாகம் குடிநீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி உதவி வருகிறது.