
கன்னட இசையமைப்பாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு
நடிகர் யோகிபாபுவின் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. மாவீரன், ஜெயிலர், அயலான் என அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்த நிலையில் முதன்முதலாக கன்னட இசையமைப்பாளர் சுராக் என்பவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. பிரபல கன்னட இசையமைப்பாளரும் இயக்குனருமான சாது கோகிலாவின் மகன் தான் இந்த சுராக். ஆனாலும் இந்த படம் தமிழில் தான் உருவாகி வருகிறது. அதன் பின்னர் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட இருக்கிறதாம். சென்னையில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 10 நாட்கள் நடைபெற்று உள்ளது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பில் யோகிபாபு கலந்து கொண்டு நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.