கிண்டிக்கு ஒரு கேள்வி? போஸ்டர் |ரயில் பெட்டி உணவகம் |திருக்கடையூரில் அண்ணாமலை தரிசனம்-News in Photos June 30, 2023 by விகடன் கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டிடத்தினை ஆட்சியர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. கன்னியாகுமரி: நாகர்கோவில் வலம்புரி உரக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தை அணைக்கும் பணிகளை மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். கோயம்புத்தூர்: ஆட்சியர் அலுவலகத்தில் பணியாளர்களின் குழந்தைகளுக்கான காப்பகத்தை ஆட்சியர் திறந்து வைத்து அக்குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். திருநெல்வேலி: தூய.சவேரியார் கல்லூரியில் நேரு யுவகேந்தரா சார்பில் நடைபெற்ற இளையோர் கலை விழா நிகழ்ச்சியை துவக்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்ட சபாநாயகர் அப்பாவு. தென்காசி: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கிய ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன். தென்காசி: கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பாவூர்சத்திரம் கால்நடை வாளகத்தில் சுமார் 72.55 இலட்சத்தில் நாட்டின நாய்கள் இன பாதுக்கப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் ஆட்சியர் துரை.ரவிசந்திரன். விழுப்புரம்: இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கமும், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி அவர்களுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு மணிமண்டபம் ஆகியவை அமைப்பது குறித்து வழுதரெட்டி கிராமத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு செய்தனர். வேலூர்: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை: வேப்பேரி காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகரின் புதிய காவல் ஆணையாளராக சந்தீப் ராய் ரத்தோர் பதவி ஏற்றுக் கொண்டார். சென்னையின் பல்வேறு இடங்களில் ‘கிண்டிக்கு ஒரு கேள்வி?’ என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் புதுச்சேரி: ஜெர்மனியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற புதுச்சேரி வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் ரங்கசாமி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். புதுச்சேரி: இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி கண் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக்கு பின் நடைபெற்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர் சந்திப்பு. புதுச்சேரி: பெரியகடை மார்க்கெட் குபேர் அங்காடி வியாபாரிகள் சார்பில் போராட்டம் நடத்துவது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் புதுச்சேரி மாநில புதிய டி.ஜி.பியாக ஸ்ரீனிவாஸ் ஐ.பி.எஸ். பொறுப்பேற்று கொண்டார். புதுச்சேரி: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொதுமக்களை சந்தித்து மோடியின் சாதனைகளை குறித்து விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் பிரச்சனை குறித்து நடைபெற்ற விவாதத்தில் மாநகராட்சியை கண்டித்து வெளிநடப்பு செய்த அதிமுக.,கவுன்சிலர்கள். ஈரோடு: தூய்மை பணியாளர்கள் எட்டாவது நாளாக தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு: கிருஷ்ணம்பாளையம் பகுதியில் சாயபட்டறையில் இருந்து வெளியேறும் சாயகழிவுகளால் அப்பகுதி மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் ஆட்சியர் ராஐகோபால் சுன்கராவிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் பயணிகளை கவரும் வகையில் ரயில் பெட்டி உணவகம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை: தமிழக டி.ஜி.பி.,சைலேந்திரபாபு பணி நிறைவு விழாவில் நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பு மரியாதை. விருதுநகர்: திருச்சுழி அருகே பனையூர் கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் குருநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது மயிலாடுதுறை: பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோயிலில் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். Source link