'கேப்டன் மில்லர்' முதல் பார்வை வெளியீடு
'ராக்கி, சாணி காயிதம்' படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.
ஒரு போர்க்களத்தில் எண்ணற்ற வீரர்கள் உயிரற்ற உடல்களாக இருக்க தனுஷ் துப்பாக்கி ஒன்றை ஏந்திக் கொண்டு நிற்கும் போஸ்டர் முதல் பார்வையாக வெளியிடப்பட்டுள்ளது. “கேப்டன் மில்லர் முதல் பார்வை, மரியாதை தான் சுதந்திரம்,” எனக் குறிப்பிட்டு அந்த போஸ்டரை பதிவு செய்துள்ளார் படத்தின் நாயகன் தனுஷ்.
இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 2023ம் ஆண்டில் இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று முதல் பார்வையில் குறிப்பிட்டுள்ளார்கள். பிப்ரவரி மாதம் தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்து வெளிவந்த 'வாத்தி' படத்திற்குப் பின்பு இந்த வருடத்திலேயே இந்தப் படமும் வெளியாகிறது.