தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பண மோசடி புகார்

நட்புனா என்னன்னு தெரியுமா, நளனும் நந்தினியும், முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். சமீபத்தில் டிவி நடிகை மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்தார். தற்போது ரவீந்தர் மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கிளப் ஹவுஸ் என்கிற செயலி மூலமாக அறிமுகமான ரவீந்தர் என்னிடம் நன்றாக பழகினார். இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் அவர் என்னிடம் 20 லட்சம் கடன் கேட்டார். சினிமா நடிகர் ஒருவருக்கு 'அட்வான்ஸ்' கொடுக்க வேண்டி இருப்பதாக கூறி இந்த பணத்தை என்னிடம் அவர் கேட்டார். நான் 15 லட்சத்தை ரவீந்தரின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தேன். இந்த பணத்தை ரவீந்தர் சொன்னபடி திருப்பி தரவில்லை. இதுபற்றி பல முறை தொடர்பு கொண்டு கேட்டும் அவர் என்னை அலைக்கழித்தார். சில நேரங்களில் அவதூறாக பேசினார். பின்னர் எனது செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டார். ரவீந்தர் என்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அதுபற்றி உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரவீந்தர் அளித்துள்ள விளக்கத்தில் “பணத்தை திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம். புகார் கொடுத்துள்ள விஜய் அதனை வாபஸ் பெறுவார் என்று நம்புகிறேன், நம்மை வெறுப்பவர்களால் நாம் சூழப்பட்டிருக்கும் நேரத்தில், அன்பைப் பகிர்ந்து, அன்பு இருப்பதை நிரூபிப்போம்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.