“மக்கள் ஆதரவை திமுக கூட்டணி இழந்து வருகிறது!” – சொல்கிறார் வானதி சீனிவாசன்

“பாஜக-வுக்கு எதிராக பாட்னாவில் எதிர்க்கட்சிகள் அணிந்திரண்டிருக்கிறார்களே, எப்படி பார்க்குறீர்கள்?

”பாட்னா கூட்டத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளை இணைக்கின்ற மையப்புள்ளிகளில் ஒன்று மோடி எதிர்ப்பு. மற்றொன்று அவர்கள் மீதான வழக்கு. அதிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கும், அவர்கள் நடத்தும் வாரிசு அரசியலை பாதுகாக்கவும்தான் இந்த முயற்சியே நடக்கிறது. மேலும் அவர்களுக்குள்ளேயே பல்வேறு முரண்கள் இருக்கின்றன. இதற்கிடையில் மோடிக்கு மாற்றாக ஒரு தலைவரை எப்படி முன்னிறுத்த போகிறார்கள்…?”

வானதி சீனிவாசன்

”இணைய மாட்டார்கள் எனச் சொல்லிவிட முடியுமா…அடுத்து சிம்லாவில் கூடுகிறார்களே!”

“அடுத்ததடுத்த கட்டம் நகரட்டுமே. முதலில் பிரதமர் வேட்பாளரை விஷயத்தில் அவர்கள் ஒரு முடிவெடுக்கட்டும், பின் என்ன நடக்கிறதென நீங்களே பொறுத்திருந்து பாருங்கள்.”

”ஒருவேளை செந்தில் பாலாஜி 20 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு வந்தால் வழக்குகளில் இருந்து விடுவிக்க படுவாரோ…?”

“அவர் வருவாரா இவர் வருவாரா என என்ன வேண்டுமானாலும் பேசலாம்… முதலில் செந்தில் பாலாஜி 20 எம்.எல்.ஏக்களை ஒருங்கிணைத்து எங்கள் கட்சிக்கு வருவதை பற்றி முடிவெடுக்கட்டும். பின் அதனை பற்றி சொல்கிறேன். ஏன் 20 எம்.எல்.ஏக்களுடன் நிறுத்துகிறீர்கள். அவர் வைத்திருக்கும் பணத்திற்கு இன்னும் கூட அதிகமான எம்.எல்.ஏ-க்களை கொண்டு வரலாம்.” (சிரிக்கிறார்)

‘‘பா.ஜ.க-வில் இணைந்துவிட்டால் விசாரணை வளையத்திலிருந்து எதிர்க்கட்சி்யினர்கூட விடுவிக்கப்பட்டு விடுகிறார்களே…?’’

‘‘ஆதாரங்கள் முறையாக இருப்பதால்தான் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இது ஆளுங்கட்சியாக இருந்துவரும் பா.ஜ.க-வினருக்கும் பொருந்தும். எனவே, ஆளும் கட்சியினர் மீதும் சோதனை மேற்கொள்ளப்படுகிறதுதான். ஆனால், அவை வெளியில் தெரியாமல் போய்விடுகிறது. மற்றொரு விஷயம்… கடந்த 9 ஆண்டு காலம் எந்தவொரு ஊழல் குற்றசாட்டும் இல்லாமல் ஆட்சி நடத்திவருவது பா.ஜ.க-தானே!’’

வானதி சீனிவாசன்

”ஆனால், கர்நாடக தேர்தலில் ”40% கமிஷன் விவகாரம்தான் ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணம் எனப்படுகிறதே?”

“குற்றசாட்டுகள் சொல்லலாம், ஆதாரத்தோடு நிரூபிக்க இங்கே என்ன இருக்கிறது. எதுவுமே இல்லையே. ஆதாரங்கள் முறையாக இருப்பதால் தான் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. அமலாக்கத்துறையிடம் ஆதாரம் இல்லையென்றால் நீதிமன்றத்தில் முறையிடலாமே.”

வானதி சீனிவாசன்

”தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலிருந்தே திமுக கூட்டணி பலமாக இருக்கிறது… உங்கள் கூட்டணியின் நிலையை ஏன் இப்படி இருக்கிறது?”

“எண்ணிக்கையை மட்டும் வைத்து வலுவாக இருக்கிறது என பேசுகிறோம். ஆனால் இரண்டாண்டு ஆட்சியின் மீதான அதிருப்தி, லஞ்சம், ஊழல் மற்றும் அரசு திட்டங்களின் நடக்கும் முறைகேடு என எல்லாவற்றையும் கடைகோடி சாமானியர்கள் வரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பலம் என்றால் கூட்டணி எண்ணிக்கையில் வைத்து வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். மக்கள் ஆதரவை திமுக கூட்டணி இழந்து வருகிறது, அது தேர்தல் வந்தால் தெரியும்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.