மத்திய அரசு மேலேயே வழக்கு போடுறியா.. ட்விட்டருக்கு ரூ.50 லட்சம் ஃபைன் போட்ட நீதிமன்றம்.. அலறிய மஸ்க்

பெங்களூர்:
ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு இந்திய அரசு கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உலக அளவில் செயல்படும் சமூக வலைதளங்களிலேயே ட்விட்டர் தான் மக்கள் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ளது. ஆக்கப்பூர்வமாகவும், பொழுதுபோக்காகவும் ட்விட்டர் சமூக வலைதளம் பயன்படுத்தப்பட்டாலும், சில விஷமிகள் தீய செயல்களுக்கும் இதை உபயோகப்படுத்துகின்றனர். தீவிரவாதத்தை பரப்புதல், தீவிரவாத இயக்கங்களுக்கு ஆள் சேர்த்தல், அரசுக்கு எதிராக வதந்திகளை பரப்புதல், ஆபாச வீடியோக்களை பதிவிடுதல் என பலதரப்பட்ட சமூக விரோத செயல்களுக்கும் ட்விட்டர் பயன்பட்டு வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இதனைக் கருத்தில்கொண்டு, சமூகவலைதளங்களை கண்காணிப்பதை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதில் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட கணக்கை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தும். இதுவரை அதுபோல நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அரசு மீது நியாயமான விமர்சனம் வைப்பவர்கள் மீது கூட இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது எனவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

“விதைப்பையை நசுக்குவது கொலை முயற்சி அல்ல”.. சண்டைனா அப்படி இப்படிதான்யா இருக்கும்.. நீதிமன்றம் உத்தரவு

இதனிடையே, கடந்த ஆண்டு பல ட்விட்டர் கணக்குகளையும், ட்வீட்டுகளையும் நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பான விசாரணை ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கானது, இரண்டு நீதிமன்ற அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “நாடு மற்றும் சமூகத்தின் நலனுக்ககாகவே ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு அரசு கூறுகிறது. ஆனால், ட்விட்டர் இந்திய அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட மறுக்கிறது” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்திய அரசு வகுக்கும் விதிமுறைககளுக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்” எனக் கூறி ட்விட்டரின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கு தொடர்ந்ததற்காக ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.