எதிர்காலம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே பாபா வங்கா, நாஸ்டர் டாமஸ் போன்றவர்கள் பல்வேறு கணிப்புகளை கூறியிருப்பதாக அடிக்கடி பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது இதுபோன்று கணிப்புகளை ஃபலோயர்களையும் வியூவர்ஸ்களையும் குவித்து வருகிறார் இளைஞர் ஒருவர்.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
எனோ அலரிக் என்ற அவர் தன்னை ஒரு டைம் ட்ராவலர் என கூறிக்கொள்கிறார். தான் 2671 ஆம் ஆண்டிலிருந்து வந்திருப்பதாகவும் கூறி வருகிறார். @theradianttimetraveller என்ற டிவிட்டர் ஹேண்டிலில் உள்ள அவர் மூன்றாம் உலகப்போர் எப்போது எப்படி ஏற்படும் என்பது குறித்து கூறி பீதியை கிளப்பியுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அருண் பொறுப்பேற்பு…. யார் இவர்?
சுவாரசியமான எதிர்கால கணிப்புகளை கூறி வரும் அவரை சமூக வலைதளங்களில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. வேற்றுக் கிரக வாசிகள் 2023ஆம் ஆண்டில் பூமிக்கு வருவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் இரண்டே ஆண்டுகளில் அதாவது 2025 ஆம் ஆண்டு இறுதியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்றும் நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இந்த மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது குறித்தும் எனோ அலரிக் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்காவின் அடுத்த அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரான் டிசாண்டிஸ் இருப்பார் என தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் மற்றும் மூன்றாம் உலகப்போர் குறித்து எனோ அலரிக் வெளியிட்டுள்ள வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர்… ஸ்டாலின் ரியாக்ஷன் இதுதான்!
இந்த வீடியோக்கள் மூலம் எனோ அலரிக் பெரும் பிரபலமாகி விட்டார். அதேநேரத்தில் எனோ அலரிக் சொல்வது எதுவுமே நடக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அடுத்த 248 வருடங்களுக்கான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக கூறி வரும் எனோ அலரிக் 2023ஆம் ஆண்டில் கூறிய விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என விளாசி வருகின்றனர்.
அதன்படி மார்ச் 23 ஆம் தேதி 8,000 பேர் பூமியில் இருந்து வேற்றுகிரகவாசிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் மே 15 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் 750 அடி உயரத்துக்கு சுனாமி அலை ஏற்படும் என்றும இதில் இரண்டு லட்சம் பேர் இறப்பார்கள் என்றும் கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
திருப்பதி பக்தர்களே.. நீங்க நம்பாட்டாலும் இதான் நிஜம்… வெறும் 3 மணி நேரம்தான்!
ஜூன் 26 ஆம் தேதி பசுபிக் பெருங்கடலில் 350 நீளத்திற்கு உலகிலேயே மிக நீளமான திமிங்கலம் கண்டுபிடிக்கப்படும் என்றார். ஆனால் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் ட்ரெண்ட்டாக வேண்டும் என்பதற்காக பொய் சொல்கிறீர்கள் என அவரை விளாசி வருகின்றனர். இருப்பினும் பரபரப்பான தகவல்களுடன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் எனோ அலரிக்.