நியூயார்க்: பல்கலைக்கழக சேர்க்கையில், இனம் மற்றும் சாதியின் அடிப்படையிலான, மாணவ சேர்க்கையை தடை செய்வதாக அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.. மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பானது, மிக முக்கிய விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது.
முன்னதாக, இது தொடர்பான வழக்கின் தீர்ப்பினை, மொத்தம் 6 நீதிபதிகள் தந்திருந்தனர்.. இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை தடை செய்ய 3 நீதிபதிகள் ஆதரித்திருந்த நிலையில், மற்ற 3 நீதிபதிகள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.. இந்நிலையில், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் இதற்கான தடையின் தீர்ப்பை உறுதி செய்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்: இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை தடை செய்ய காரணம் என்ன? அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பின் முக்கியமான அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உறுதியான நடவடிக்கையின் நல்ல நோக்கத்தை தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டாலும்கூட, அது அரசியலமைப்பிற்கு எதிரான பாகுபாடு என்று தன்னுடைய தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.. மாணவர்களை, அவர்களின் இனத்தை விட அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் தனிப்பட்டவர்களாக கருதவேண்டும் என்ற முக்கியத்துவத்தையே, மற்ற 3 நீதிபதிகள் வலியுறுத்துவதாகவும், அதற்கான ஆதரவையே தான் அளிப்பதாகவும், தலைமை நீதிபதி கூறியிருந்தார்.
தீர்ப்புகள்: எனினும், இந்த தீர்ப்பானது பல்வேறு தரப்பினரின் அதிருப்தியை பெற்று வருகிறது.. சிறுபான்மையினருக்கு, அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க – அமெரிக்கர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட நீண்டகால நடைமுறையில் இருந்து, விலகுவதை குறிப்பதாக கருத்துக்கள் எழுந்துள்ளன..
ஒரு இனத்தை கவனிக்காமல் இருப்பது என்பது, உண்மையான சமத்துவத்திற்கு வழிவகுக்காது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.. மேலும், இப்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
ஒருசாரார் இந்த தீர்ப்பின் பாதகங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.. மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை மதிப்பிடும்போது, இனவெறி அனுபவங்கள் உட்பட, விண்ணப்பதாரரின் பின்னணியைக் கருத்தில் கொள்ள இந்த தீர்ப்பு பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதித்துவிடுவதுடன், விண்ணப்பதாரரின் இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் விண்ணப்பங்களை பரிசீலிப்பதை இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தும்விதமாகவும் இந்த தீர்ப்பு அமைந்துவிடும் என்கிறார்கள்..
திட்டங்கள்: மேலும், பல்கலைக்கழக சேர்க்கை செயல்முறையின்போது, பின்தங்கிய சிறுபான்மையினருக்கு, கூடுதல் பரிசீலனைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களை நிறுத்துவதற்கு இந்த முடிவு வழிவகுக்கும் என்றும் கலக்கங்கள் சூழ்ந்து வருகின்றன..
ஆனால் மற்றொரு சாராரோ, கன்சர்வேடிவ்கள் தீர்ப்பை வரவேற்கின்றனர்.. கறுப்பின அமெரிக்கர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் முன்னேற்றம் காரணமாக, இப்போது உறுதியான நடவடிக்கை (affirmative action) என்பது நியாயமற்றது என்றும், இனி இது தேவையில்லை என்றும் கூறுகிறார்கள்.. அதுபோலவே, இந்த தீர்ப்பை முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வரவேற்கிறார்.. நேர்மை மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி இந்த முடிவை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
கிளம்பிய விவாதம்: சிறுபான்மையினருக்கான கல்வி வாய்ப்புகளை வளப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டிருந்த நடைமுறையை, தற்போது வழங்கப்பட்டுள்ள கோர்ட்டின் தீர்ப்பானது மாற்றியுள்ளதுடன், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பானது, மிக முக்கிய விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.