சாய் பாபாவை கடவுளாக நினைத்து வணங்கும் பக்தர்கள் பல லட்சம் பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் சாய் பாபா கோயில்கள் வந்துவிட்டன. வியாழன் வந்துவிட்டால் போதும். மக்கள் திரள் திரளாக சாய் பாபா கோயிலுக்கு படையெடுத்து சென்றுவிடுவர். இந்த கோயிலை நிர்வகிக்க உள்ளூர் மக்கள் இணைந்த குழு ஒன்று உருவாக்கப்பட்டு அன்னதானம், சாமி தரிசனம், சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன.
ஸ்ரீரடி சாய் பாபா கோயில்இருப்பினும் சாய் பாபா வாழ்ந்து மறைந்த ஸ்ரீரடிக்கு தனிப் பெருமை உண்டு. இங்கு ஒருமுறையாவது நேரில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கிறது. ஸ்ரீரடி என்பது மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. எப்படி ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறதோ? அதேபோல் மகாராஷ்டிராவில் ஸ்ரீரடி சாய் பாபா கோயிலுக்கு தனிச் சிறப்பு உண்டு.சிறப்பு விளக்கு பூஜைஆன்லைன் டிக்கெட்நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். இதற்காக பிரத்யேக இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையும் அமலில் இருந்து வருகிறது. https://online.sai.org.in/ என்ற இணையதளத்திற்கு சென்று பக்தர்கள் தங்களின் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை அளித்து லாகின் செய்து கொள்ள வேண்டும்.
சாய் பாபா தரிசனம்அதன்பிறகு எந்த தேதியில் எத்தனை பேர் தரிசனம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அரசின் அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை எண்ணை வழங்க வேண்டியது அவசியம். தரிசனத்திற்கான தேதியை கிளிக் செய்தால் காலண்டர் ஒன்று திறக்கும். அதில் பச்சை நிறங்களில் உள்ள தேதிகளில் தரிசிக்க இடம் இருக்கிறது என்று அர்த்தம்.
தரிசன நேரங்கள்சிவப்பு காணப்பட்டால் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டு விட்டது எனப் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளிலும் காலை 6, 7, 8, 9, 10 ஆகிய நேரங்களிலும், பிற்பகல் 1, 2, 3, 4 ஆகிய நேரங்களிலும், இரவு 8 மணிக்கும் தரிசிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஆர்த்தி, பூஜைகள், தங்கும் விடுதிகள்ஆண், பெண் என இருபாலருக்கும் ஒரு டிக்கெட் தலா 200 ரூபாய் ஆகும். 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசம். ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியே அடையாள ஆவணத்தை குறிப்பிட வேண்டும். ஒரு லாகினில் அதிகபட்சமாக 4 டிக்கெட்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இதேபோல் ஆர்த்தி, பூஜைகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றுக்கும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.அறக்கட்டளை உறுப்பினராக வாய்ப்புமேலும் ஸ்ரீரடி சாய் பாபா கோயில் அறக்கட்டளையின் உறுப்பினர் ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதற்காக குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு கட்டணம் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். பத்ரான் எனப்படும் பிரிவில் 5 லட்ச ரூபாய் செலுத்தி 20 ஆண்டுகள் உறுப்பினராகி விடலாம்.
ஸ்ரீரடி பிரத்யேக வெளியீடுகள்லைஃப் பிரிவில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி 15 ஆண்டுகளும், சாதாரண பிரிவில் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஓராண்டும் அறக்கட்டளை உறுப்பினராக விடலாம். இதையடுத்து நன்கொடை செலுத்தவும், ஸ்ரீரடி சாய் பாபா கோயில் சார்பில் வெளியிடப்படும் புத்தகங்கள், காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் பெறும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.