பாலக்காடு:கேரள மாநிலம், அட்டப்பாடி அருகே, வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் வந்த குட்டி யானை இறந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பாலுார் குடியிருப்பு பகுதிக்கு, 15ம் தேதி காட்டு யானை குட்டி ஒன்று வழி தவறி வந்தது.
தகவல் அறிந்த வனத்துறையினர், தாய் யானை உலா வரும் யானை கூட்டத்துக்கு அருகில் குட்டியை விட்டனர். ஆனால், குட்டி யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்தது.
இதை அறிந்த வனத்துறையினர், யானை குட்டிக்கு உணவுகள் அளித்து பொம்மியாம்படியில் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், சோர்வாக காணப்பட்ட குட்டி யானை, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு இறந்தது.
கால்நடை மருத்துவர் டேவிட் வினோத் தலைமையிலான மருத்துவக் குழு பிரேத பரிசோதனை செய்தது.
அதில், உள்உறுப்பு தொற்று காரணமாக, குட்டி யானை உணவு உட்கொள்ளாமல் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பொம்மியாம்படி வனப்பகுதியில் அதன் உடல் எரியூட்டப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement