Chinas Xi Jinping To Virtually Attend SCO Regional Meet Hosted By India | ஜூலை 4ல் இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபர், பாக்., பிரதமர் பங்கேற்பு

புதுடில்லி: ஜூலை 4ம் தேதி இந்தியா தலைமையில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங், வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கேற்பார் என அந்நாடு அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் கலந்து கொள்வார் என அந்நாடு அறிவித்து உள்ளது.

2001 ல், ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பில், 2017 ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினர்களாக இணைந்தன. சுழற்சி முறையில் இந்த அமைப்பின் மாநாட்டை நடத்தும் பொறுப்பு இந்தியாவிற்கு இந்த ஆண்டு கிடைத்துள்ளது.

சீனா அதிபர் பங்கேற்பு

இந்த அமைப்பின் 23வது மாநாடு வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கேற்று முக்கிய உரை ஆற்றுவார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

பாக்., பிரதமர் பங்கேற்பு

latest tamil news

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 4 ம் தேதி நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்து கொள்வார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தற்போது, தலைமைப் பதவியில் உள்ள இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.