சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. Urband categoryயில் வெளியாகியுள்ளது இந்த லிஸ்ட்.
இந்த லிஸ்ட்டில் தற்போது 4வது இடத்தை ஈரமான ரோஜாவே 2 தொடர் பெற்றுள்ளது. இந்தத் தொடருக்கு 6.9 புள்ளிகள் கிடைத்துள்ளன.
ஜோடி மாற்றி திருமணம் நடைபெறும் இரண்டு ஜோடிகள் மற்றும் அவர்களுக்கிடையிலான பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
குடும்பத்தை பிரிக்க சூழ்ச்சி செய்யும் தேவி: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது ஈரமான ரோஜாவே 2. இந்த வாரத்திற்கான Urban category லிஸ்ட் வெளியாகியுள்ள நிலையில் இந்தத் தொடர் 6.9 புள்ளிகளுடன் சேனலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. திருமணத்தின்போது நடைபெறும் குளறுபடியால், ஜோடி மாற்றித் திருமணம் செய்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு இந்தத் தொடரின் கேரக்டர்கள் உள்ளாகின்றனர். பார்த்திபன் காவ்யாவையும், பிரியா ஜீவாவையும் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.
ஜீவாவும் காவ்யாவும் முன்னதாக காதலித்த நிலையில்தான் இவ்வாறு மாற்றி திருமணம் செய்யும் சூழல் உருவாகிறது. இதை தொடர்ந்து இவர்களின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை இந்தத் தொடர் சிறப்பான வகையில் சிறப்பான எபிசோட்களாக கொடுத்து வந்தது. இந்நிலையில், தங்களின் துணைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு ஜீவாவும் காவ்யாவும் வருகின்றனர். ஆனால் இவர்களின் காதல் குறித்து அறியும் பார்த்தி மற்றும் பிரியா, அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்புக்குள்ளாகின்றனர்.
காவ்யா தனக்கு உண்மையாக இல்லை என பார்த்திபனும், ஜீவா தன்னுடைய முந்தைய காதலை தன்னிடம் மறைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிரியாவும் ஆத்திரப்படுகின்றனர். தொடர்ந்து மாற்றி மாற்றி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் கர்ப்பமாகும் காவ்யா, தன்னிடம் ஆத்திரமாக இருக்கும் தன்னுடைய கணவனிடம் அந்த உண்மையை மறைக்கிறார். இதனிடையே இந்த உண்மை குறித்து தன்னுடைய அத்தை தேவி மூலம் பார்த்திக்கு தெரியவருகிறது.
தான் கர்ப்பமான விஷயத்தை அதிலும் இரட்டைக் குழந்தைகளை சுமந்துள்ள விஷயத்தை தன்னிடம் காவ்யா மறைத்தது தெரிந்து காவ்யாவிடம் ஆத்திரப்படுகிறார் பார்த்தி. தொடர்ந்து காவ்யாவை வீட்டை விட்டு வெளியேறும்படியும் கூறுகிறார். ஆனால் தன்னுடைய பெற்றோர், குழந்தை விஷயத்தில் மகிழ்ச்சியடைந்ததை பார்த்து, சமாதானமடைகிறார். ஆனாலும் தன்னை தொடர்ந்து நம்பாமல் இருக்கும் தன்னுடைய மனைவியிடம் தன்னுடைய கோபம் என்றுமே மாறாது என்று கூறுகிறார்.
இந்நிலையில் பார்த்தியிடம் காவ்யாவின் கர்ப்பம் குறித்து பேசி, அவரது கோபத்தை தூண்டிய தேவி, தற்போது ஜீவாவின் மனைவி பிரியாவின் மனதிலும் குழப்பங்களை உண்டு செய்கிறார். ஜீவாவும் காவ்யாவும் ஒரே இடத்தில் இருந்தால் அவர்களால் எப்படி அவர்களது காதலை மறக்க முடியும் என்று ஏற்றி விடுகிறார். அதனால் ஜீவாவை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் செல்லும்படி கூறுகிறார். அவரது இந்த வார்த்தைகளை கேட்டு பிரியா குழப்பமடைவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.