Hansika:கணவரை வேறு அறையில் தூங்கச் சொல்லும் ஹன்சிகா: ஏன் தெரியுமா?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகாவுக்கு ஹேண்ட்பேகுகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் பிராண்டட் ஹேண்ட்பேகுகளை வாங்கி வருகிறார்.

கெத்தாக வந்த ரஜினி: ஆர்ப்பரித்த ரசிகர்கள்!
இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

18 வயதில் இருந்து எனக்கு ஹேண்ட்பேகுகள் மீது ஆசை ஏற்பட்டது. என் முதல் ஹேண்ட்பேக் Louis Vuitton பிராண்ட். ரூ. 1 லட்சத்திற்கு கீழ் வாங்க நினைத்தேன். ஆனால் முடியவில்லை. என் எல்.வி. பேக் எனக்கு மிகவும் ராசியானது.

எங்கு சென்றாலும் அதை எடுத்துச் செல்வேன். என் அம்மா, சகோதரருக்கு பேக் மீது ஆர்வம் இல்லை. ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும். விலை உயர்ந்த ஹேண்ட்பேகுகளை வாங்குவது வீண் அல்ல அதை முதலீடாக பார்க்கிறேன்.

ஒரு பாட்டு பாட ரூ. 3 கோடி வாங்கும் இசையமைப்பாளர்: நாட்டிலேயே அவர் தான் காஸ்ட்லி பாடகர்

என் அனைத்து ஹேண்ட்பேகுகளும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் உள்ளது. கடந்த ஆண்டு பாரீஸ் சென்றபோது வாங்கிய கெல்லி பேக் தான் தற்போது எனக்கு மிகவும் பிடித்த ஹேண்ட்பேக்.

நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் இதை எல்லாம் வாங்குகிறேன். நான் மீண்டும் பாரீஸ் செல்லவிருக்கிறேன். அதனால் மீண்டும் கெல்லி பேகை வாங்க திட்டமிட்டுள்ளேன்.

நான் சொஹைல் கதூரியாவுடன் டின்னருக்கு வெளியே சென்றால் இரண்டு சேர் அல்ல மூன்று சேர் இருக்கும் டேபிளை தான் புக் செய்வோம். என் ஹேண்ட்பேகிற்கு என்று எப்பொழுதும் தனி சேர் ஒதுக்கிவிடுவேன். அந்த அளவுக்கு என் ஹேண்ட்பேகுகளை பொக்கிஷமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் மும்பையில் இருந்து ஒரு நாளுக்கு மட்டும் வெளியூர் செல்வதாக இருந்தாலும் கூட என் படுக்கை முழுவதும் பேகுகளாக இருக்கும். அதனால் என் கணவர் என் படுக்கையில் இல்லாமல் வேறு அறையில் தூங்குவதையே விரும்புவேன் என்றார்.

ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அண்மையில் பதில் அளித்தார்.

அப்பொழுது ரசிகர் ஒருவரோ, நீங்க ரொம்ப க்யூட், என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டார். அதற்கு ஹன்சிகாவோ, ரொம்ப லேட்டா வந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன் என்று க்யூட்டாக பதில் அளித்தார்.

ஹன்சிகாவும், அவரின் பிசினஸ் பார்ட்னருமான சொஹைல் கதூரியாவும் காதலித்து கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் அரண்மனையில் அவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.

அவர்களின் திருமண வீடியோ லவ் ஷாதி டிராமா என்கிற பெயரில் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியானது. நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவை எதிர்பார்த்த நேரத்தில் அவர்களை முந்திக் கொண்டு ஹன்சிகாவின் திருமண வீடியோ வெளியானது. அதில் தன் முந்தைய காதல் பற்றி எல்லாம் பேசி ரசிகர்களை வியக்க வைத்தார். ஹன்சிகாவின் திருமண வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

ஹன்சிகாவின் கெரியருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார் சொஹைல் கதூரியா. திருமணத்திற்கு பிறகு படங்களில் படுபிசியாகிவிட்டார் ஹன்சிகா. ஹீரோயினை மைமயாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்த ஆண்டின் பிசியான நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர் ஆவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.