Lust Stories 2: பரபரப்பை கிளப்பிய 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' எப்படி இருக்கு.?: முழு விமர்சனம் இதோ.!

கடந்த 2018 ஆம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ தொடரின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி அண்மையில் டீசர் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது. இந்நிலையில் தற்போது ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ இரண்டாம் பாகம் தொடரில் தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் வர்மா, கஜோல் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஆர். பால்கி, கொங்கோனா சென் ஆகியோர் இயக்கத்தில் நான்கு வித்தியாசமான கதைகளை கொண்ட ஆந்தாலாஜி தொடராக ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ தொடரில் பால்கி இயக்கத்தில் முதல் சீரிஸாக ‘Made For Each Other’ இடம்பெற்றுள்ளது. இதில் நீனா குப்தா, மிருணாள் தாகூர், அங்கத் பேடி ஆகியோர் நடித்துள்ளனர். திருமணத்திற்கு முன்பே ஒரு ஜோடிகளுக்கு இடையே ஏற்பட வேண்டிய காதல், இணக்கம் குறித்து இந்த தொடர் பேசியுள்ளது.

கொங்கனா சென் சர்மா இயக்கத்தில் The Mirror’ இரண்டாம் தொடராக இடம்பெற்றுள்ளது. இதில் திலோத்தமா சோம், அம்ருதா சுபாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பெண்ணின் பாலுணர்வு தேவைகள் குறித்து பேசும் தொடராக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

Maamannan: நாளை வெளியாகும் ‘மாமன்னன்’.. கமலின் செயலால் நெகிழ்ந்த உதயநிதி, மாரி செல்வராஜ்.!

இதனையடுத்து மூன்றாவது சீரிஸான ‘செக்ஸ் வித் எக்ஸ்’ தொடரை சுஜய் கோஷ் இயக்கியுள்ளார். இதில் தமன்னா, விஜய் வர்மா நடித்துள்ளனர். திருமணமான கதாநாயகன் முன்னாள் காதலியை சந்திக்கும் போது, அவள்மீது மோகம் கொண்டு உறவு கொள்வதை போன்று இந்த தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் தமன்னா, விஜய் வர்மா இடையேயான ரொமான்ஸ் காட்சிகளில் கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க்அவுட் ஆகியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதனையடுத்து கடைசி தொடராக அமித் ரவீந்தர்நாத் இயக்கியுள்ள ‘Tilchatta’ சீரிஸில் கஜோல், குமித் மிஷ்ரா நடித்துள்ளனர். குடும்பத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள் குறித்து பேசும் தொடராக இது உருவாகியுள்ளது. கஜோலை கொடுமைப்படுத்தி கணவர் பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ முழு தொடரை பார்ந்த நெட்டிசன்கள் முதல் பாகம் அளவிற்கு இல்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Indian 2: ‘இந்தியன் 2’ பார்த்து பிரம்மித்த கமல்: சூர்யாவுக்கு ரோலக்ஸ்.. ஷங்கருக்கு காஸ்ட்லி கிப்ட்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.