Maamannan: மாமன்னன் எஃபெக்ட்.. மாரி செல்வராஜ், பா. ரஞ்சித்தை விளாசிய லீனா மணிமேகலை!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மாமன்னன் படத்தில் நிறைய பிழைகள் உள்ளதாகவும், இயக்குநர்கள் பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் சாதிய போராளிகள் போல நடிப்பதாகவும் இயக்குநர் லீனா மணிமேகலை விளாசி உள்ளார்.

அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட போஸ்ட்டை ப்ளூ சட்டை மாறனும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

லீனா மணிமேகலை விளாசல்: “தமிழ்நாட்டில் சாதிவெறியர் பட்டம் பெறுவது ரொம்ப எளிது, மாரி செல்வராஜ் அல்லது பா.ரஞ்சித் படங்களை விமர்சித்தால் போதும். நீங்கள் உங்கள் வாழ்க்கையையே சாதி ஒழிப்பிற்கு ஒப்புக் கொடுத்திருந்தாலும் அதுதான் கெதி.

வெற்றிமாறனின் ‘அசுரனை’ விமர்சித்தால் வராத பட்டமும் அவதூறும் ‘கர்ணன்’ போன்ற சாதி ஒழிப்பென்ற பெயரில் – அல்னிமேட்டாக phallic – hyper-masculine – violent – caste pride பேசும் படத்தை குறித்து பேசும் போதும், ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற பாசாங்கான அரைவேக்காட்டு பெண்ணியப் படத்தைக் குறித்து பேசும்போதும் வருகிறதென்றால் எங்கே பிரச்சனை என்பது அப்பட்டம்.

Anti Caste warrior பட்டம் பெறுவதும் எளிது. கலை நேர்மையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு இவர்கள் செய்வதையெல்லாம் வானளாவ புகழ்ந்துவிட்டால் போதும். Very easy. களத்தில், கருத்தியலில் எல்லாம் எதுக்கு வேலை செய்யனும்.
இன்னும் பத்து மு்ப்பது வருடங்கள் கழித்து ஒரு அருந்ததியரோ, குறவரோ, புதிரைவண்ணாரோ வந்து நான் பேசுவதையெல்லாம் பேசுவார்கள், பேச வேண்டும்.
மற்றபடி வியாபார சினிமாவில், லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் சந்தையில் எல்லாமே சரக்கு தான். அதில் சாதி ஒழிப்பு பேசுகிறேன், புரட்சி செய்கிறேன், பொன்னுலக பூமி படைக்கிறேன் என்றெல்லாம் க்ளைம் செய்வதும், அதை தமிழ் அறிவுப் புலமும் இலக்கிய முகாம்களும் முற்போக்கு இடதுசாரி கூட்டங்களும் கொண்டாடுவதும் உண்மையில் ஒரு அவல நாடகம். வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு!” என இயக்குநர் லீனா மணிமேகலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Leena Manimekalai slams Mari Selvaraj and Pa Ranjith for misuse caste issues for their profit

மாமன்னன் சர்ச்சை: மாமன்னன் படம் மக்களுக்கான படமாக இல்லாமல், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் ஆயுதமாக மாரி செல்வராஜ் எடுத்திருக்கிறார் என்று ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.

ப்ளூ சட்டை மாறனும் தனது ட்விட்டர் பக்கத்தில் லீனா மணிமேகலையின் இந்த போஸ்ட்டை ஷேர் செய்துள்ளார். அதற்கு கீழ் உதயநிதியின் ரசிகர்கள் படுமோசமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.