Maamannan collection: வசூல் மன்னனாக மாறிய மாமன்னன்: முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா!!!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Udhayanidhi Stalin: மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் படம் கில்லியாக மாறியிருக்கிறது.

​மாமன்னன்​மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படம் பக்ரீத் பண்டிகை ஸ்பெஷலாக நேற்று தியேட்டர்களில் ரிலீஸானது. மாமன்னன் படம் பார்க்கும் அனைவரும் அது குறித்து நல்லவிதமாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் படம் ரிலீஸான அன்று மட்டும் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

​மாமன்னன் விமர்சனம்உதயநிதி​”ஒரே படத்துல சமுதாயத்தை திருத்த போறேன்னு சொல்லல” உதயநிதி பேட்டி!​​முதல் நாள் வசூல்​மாமன்னன் படம் நேற்று மட்டும் ரூ. 5.50 கோடி முதல் ரூ. 6.50 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வார இறுதிநாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினின் கெரியரிலேயே அதிகம் வசூல் செய்த படமாக அமைந்துவிட்டது மாமன்னன். இது தான் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
​வசூல் சாதனை​இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளியாகி ஆதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் மாமன்னனுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. அஜித் குமாரின் துணிவு, விஜய்யின் வாரிசு, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படங்களை அடுத்து மாமன்னன் தான் தமிழகத்தில் ரிலீஸான நாளில் வசூல் வேட்டை நடத்திய படமாக அமைந்துள்ளது.

​சீரியஸான வடிவேலு​Amy Jackson: நடுத்தெருவில் காதலருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஏமி ஜாக்சன்: வைரல் போட்டோமாமன்னன் படத்தில் வடிவேலு மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக காமெடி செய்து நம்மை சிரிக்க வைத்த வடிவேலுவை திரையில் ஒரு நொடி கூட பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு மாரி செல்வராஜின் மாமன்னனாகவே வாழ்ந்திருக்கிறார் வடிவேலு. அவரின் மகனாக உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக நடித்துள்ளார்.

​அரசியல் வாரிசு​தமிழக முதல்வரின் மகனான உதயநிதி ஸ்டாலினை ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வின் மகனாக நடிக்க வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின். ஃபஹத் ஃபாசிலோ கொடூர வில்லனாக வந்து ரசிகர்களிடம் சாபம் வாங்கியிருக்கிறார். படம் என்பதை மறந்து ஃபஹத் ஃபாசில் ஏதோ நிஜமாகவே வில்லத்தனம் செய்வது போன்று தியேட்டரில் இருப்பவர்கள் சபித்ததை பார்க்க முடிந்தது.

​ஒரு பாட்டு பாட ரூ. 3 கோடி வாங்கும் இசையமைப்பாளர்: நாட்டிலேயே அவர் தான் காஸ்ட்லி பாடகர்​
​கீர்த்தி சுரேஷ்​உதயநிதி ஸ்டாலினின் அழகிய காதலியாக வந்து போயிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக நடிப்பார் கீர்த்தி. ஆனால் மாமன்னன் படத்தில் கீர்த்திக்கு பெரிதாக வேலை இல்லை. இதற்கிடையே இது உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதாலும் பலரும் தியேட்டருக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

​Hansika:கணவரை வேறு அறையில் தூங்கச் சொல்லும் ஹன்சிகா: ஏன் தெரியுமா?​
​முடிவை மாத்துங்க​என் கெரியரின் முக்கியமான படமாக மாமன்னன் அமையும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். அவர் சொன்னது போன்று தான் நடந்திருக்கிறது. உதயநிதியின் கெரியர் பெஸ்ட் ஓபனிங் மாமன்னன் படத்திற்கு கிடைத்துள்ளது. வெற்றிப் படத்துடன் ஓய்வு பெறுகிறார். மக்கள் பணி செய்ய அதிக நேரம் தேவைப்படுவதால் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தன் முடிவை மாற்றிக் கொண்டு அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.