சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு மாவீரன், அயலான் படங்கள் வெளியாகவுள்ளன.
இதில் மாவீரன் திரைப்படம் ஜூலை 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது கேப்டன் மில்லர் ட்ரெய்லர் அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
தனுஷின் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியான சிலமணி நேரங்களில் மாவீரன் ட்ரெய்லர் அப்டேட் வெளியாகியுள்ளது.
மாவீரன் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி: கோலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது SK 21 படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. இந்தப் படம் ஜூலை 14ம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் தனது கேரியரில் இதுவரை செய்திடாத கேரக்டரில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடித்துள்ளது இந்தப் படத்தின் இன்னொரு சர்ஃப்ரைஸ் எனலாம்.
மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி தான் ரிலீஸாக இருந்தது. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக மாவீரன் ரிலீஸை ஜூலை 14ம் தேதிக்கு மாற்றியது படக்குழு. இதனிடையே மாவீரன் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது மாவீரன் ட்ரெய்லர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.
அதன்படி, மாவீரன் ட்ரெய்லர் ஜூலை 2ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக மினி ப்ரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ நீருக்கு அடியில் இருந்து சிவகார்த்திகேயன் கத்துவதாக உருவாகியுள்ளது. மாவீரன் படத்தின் ட்ரெய்லர் அப்டேட்டால் சிவகார்த்திகேயன் உற்சாகத்தில் உள்ளனர். அதேநேரம் தனுஷ் ரசிகர்கள் செம்ம டென்ஷனாக காணப்படுகின்றனர்.
சிலமணி நேரங்களுக்கு முன்புதான் தனுஷின் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அதற்குள் மாவீரன் ட்ரெய்லர் அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக்கை விடவும் மாவீரன் ட்ரெய்லர் அப்டேட் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் காணப்படுகிறது. திடீரென மாவீரன் ட்ரெய்லர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.