சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு குட்பை சொல்லிவிட்டு கிளம்பிய மணிமேகலை தற்போது வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க சென்றுள்ளார்.
அவருடன் KPY பாலாவும் சேர்ந்துக் கொண்டு அடிக்கும் லூட்டி வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அமெரிக்கா போனாலும், எங்க புத்தி மாறாது என அமெரிக்கா பரிதாபங்கள் சீரிஸை வெளியிட்டுள்ளார் மணிமேகலை.
கேபிஒய் பாலாவுடன் தான்: குக் வித் கோமாளியில் தொடர்ந்து கோமாளியாக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்த விஜே மணிமேகலை திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை கிளப்பியது.
அதன் பின்னர், பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ரசிகர்களை மகிழ்வித்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை சமீபகாலமாக தொகுத்து வழங்கி வரும் கேபிஒய் பாலாவுடன் தான் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் நிகழ்ச்சியையும் இருவரும் தான் இணைந்து தொகுத்து வழங்கினர்.
அமெரிக்காவில் மணிமேகலை: தனது கிராமத்தில் சொந்தமாக பண்ணை வீடு கட்டி வரும் மணிமேகலை தற்போது அமெரிக்காவில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கேபிஒய் பாலாவுடன் பறந்து சென்றுள்ளார்.
அங்கே இருவரும் பண்ணும் சேட்டைகளை தற்போது வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார் மணிமேகலை.
பிச்சையெடுத்து சாம்பார் சாதம்: அமெரிக்காவுக்கு சென்ற நிலையில், அங்குள்ள பன், பீட்ஸா எல்லாம் ஒரு நாளைக்கு மேல் நமக்கு செட்டாகாது. நம்ம ஊர் சாம்பார் சாதம் எங்கே இருக்குன்னு தேடிப்பிடித்து பிச்சை எடுத்து நாங்க ரெண்டு பேரும் இப்படி ரகசியமா குத்தவச்சு உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம் என மணிமேகலை பேசிய வீடியோ வேகமாக ஷேர் ஆகி வருகிறது.
மணிமேகலையுடன் கேபிஒய் பாலாவும் குத்த வச்சி உட்கார்ந்துக் கொண்டு அந்த சாம்பார் சாதத்தை ரசித்து ருசித்து சாப்பிடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அமெரிக்கா போனாலும், சாம்பார் சாதத்தை விடாமல் சாப்பிடும் உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.