சென்னை: நடிகை பூஜா ராமச்சந்திரன் தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தொகுப்பாளியான பூஜா ராமச்சந்திரனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்ததால், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் துணை நடிகையானார்.
காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா, அந்தகாரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
நடிகை பூஜா ராமச்சந்திரன்: பார்ப்பதற்கு நல்லா மூக்கு,முழியுமா வசீகரமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளப்படங்களிலும் நடித்து அனைத்து ஆடியன்சுக்கும் தெரிந்த முகமாக மாறினார். இவர் கிரெக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
காதல் திருமணம்: முதல் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததை அடுத்து, சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கொக்கைனை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்த காதல் தம்பதியினர் வார இறுதி நாட்கள் வந்துவிட்டால் போதும் சும்மா ஜாலியாக ஊர் சுற்ற கிளம்பிவிடுவார்கள்.
கியான் கொக்கேன்: கடந்த டிசம்பர் மாதம் பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை இருவரும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருந்தனர். இதையடுத்து ஏப்ரல் மாதம் பூஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கியான் கொக்கேன் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்திருந்தனர்.
வாவ் க்யூட்: இந்நிலையில், நடிகை பூஜா தனது குழந்தைக்கு இரண்டுமாதம் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருக்கும் அந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் வாவ் … செம க்யூட் என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.