சென்னை: Pushpa 2 (புஷ்பா 2) புஷ்பா 2 படத்தின் சண்டைக் காட்சிக்கு 80 லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய்வரை வசூலித்ததது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
புஷ்பா 2வுக்கு நோ சொன்ன சமந்தா: புஷ்பா படத்தின் முதல் பாகம் எவ்வளவுக்கு எவ்வளவு ஹிட் ஆனதோ அதே அளவு சென்சேஷனல் ஹிட்டானது ஊ சொல்றியா மாமா பாடல்தான். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் சமந்தா அந்தப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். இதனையடுத்து தற்போது உருவாகும் புஷ்பா 2 படத்திலும் அதேபோல் ஒரு நடனம் ஆடுவதற்கு சமந்தாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அதற்கு சமந்தா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
விறுவிறுப்பாக நடக்கும் ஷூட்டிங்: முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் அண்மையில் தொடங்கியது. இதில் அல்லு அர்ஜுன் மற்றும் பிற நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். மேலும், இலங்கை மற்றும் தாய்லாந்தில் ஷூட் செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் புஷ்பா இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஃபஹத் பாசில் போர்ஷன்: புஷ்பா படத்தில் பன்வர் சிங் செகாவாட் என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக அவரது லுக் வித்தியாசமாக இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினர். இந்தச் சூழலில் புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கில் ஃபஹத் பாசிலுக்கான போர்ஷன் தொடங்கி அண்மையில் முடிவடைந்தது.
80 லட்சம் ரூபாய்: இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் சண்டைக் காட்சிகள் தற்போது மும்முரமாக படமாக்கப்பட்டுவருகிறது. சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுவதைவிட அதையொட்டி வெளியாகியிருக்கும் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அதாவது இந்த சண்டைக் காட்சிகளுக்காக ஒரு நாளுக்கு 80 லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு நாளைக்கு 80 லட்சம் ரூபாய் என்றால் படத்தின் மொத்த பட்ஜெட் எகிறிவிடுமே என சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.