Putin Praises Make In India, Says Had Visible Effect On Indian Economy | இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ‛மேக் இன் இந்தியா: புடின் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: பிரதமர் மோடியின், ‛மேக் இன் இந்தியா’ திட்டம், இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் தெளிவாக தெரிகிறது என ரஷ்ய அதிபர் புடின் புகழாரம் சூட்டி உள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் புடின் பேசியதாக அந்நாட்டு நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: ரஷ்யாவின் மிக நெருங்கிய நண்பரான, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சில வருடங்களுக்கு முன்பு ‛மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம், இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் தெளிவாக தெரிகிறது.

latest tamil news

இந்தியாவில் உள்நாட்டு பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுவது போல், ரஷ்யாவிலும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.