இந்தியாவின் தலைசிறந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர் சி.எஸ். சந்தோஷ் சோதனை செய்கின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் ஆஃப் ரோடு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் தயாரித்து வருகின்ற 450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற அட்வென்ச்சர் பைக் மாடலான ஹிமாலயன் 450 மாடலை சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வரும் நிலையில் மிக தீவரமான ஆஃப் ரோடு சோதனையை மேற்கொண்டு வருகின்றது.
RE Himalayan 450
வீடியோ டீசரில் பார்ப்பது, முழுமையாக உற்பத்தி நிலை எட்டியுள்ள சோதனை ஓட்ட மாடலாகவே உள்ளது. பிக் ராக் டர்ட்பார்க் இருக்கும் பெங்களூரில் இது படமாக்கப்பட்டிருக்கலாம். ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 டர்ட் டிராக் முழுவதும் அதன் மிக சிறப்பான அனுபவத்தை வெளிப்படுத்துகின்றது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் மாடலில் 21 இன்ச் பெரிய முன்பக்கம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றுள்ளது. ஸ்க்ராம் 450 பைக்கில் 19-இன்ச் முன் சக்கரத்தைப் பெறவதும், பின்புறத்தில் 17-இன்ச் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான நிலைமைகளைச் சமாளிக்கும் அட்வென்ச்சர் மாடல் விரைவில் விற்பனைக்கு வரக்கூடும்.
35 hp பவரை விட கூடுதலாக வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் விலை ரூபாய் 3.50 லட்சத்திற்க்குள் வெளியாகலாம்.
https://www.instagram.com/p/CuHUIjVhFeC/