ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது 28வது படத்தில் நடித்து வருகிறார்.
த்ரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில் ‘குண்டூர் காரம்’ என கடந்த மாதம் படக்குழு அறிவித்திருந்தது.
மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திற்கு தமன் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருந்தார்.
இந்தப் படத்தில் மகேஷ் பாபுவுக்கும் தமனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமனுக்கு வார்னிங் கொடுத்த மகேஷ் பாபு: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார் மகேஷ் பாபு. இதுவரை 27 படங்களில் மட்டுமே நடித்துள்ள மகேஷ் பாபுவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனது 28வது படத்தில் நடித்து வருகிறார் மகேஷ் பாபு. இந்தப் படத்தின் டைட்டில் ‘குண்டூர் காரம்’ என கடந்த மாதம் இறுதியில் அறிவிப்பு வெளியானது.
மேலும், டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபுவுடன் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இந்தப் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. கால்ஷீட் பிரச்சினையால் தான் அவர் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஓவர் ஆக்டிங் காரணமாக தான் பூஜா ஹெக்டேவை படக்குழு நீக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பஞ்சாயத்துக்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில், தற்போது மகேஷ் பாபு – தமன் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல் நாளில் இருந்தே இயக்குநர் த்ரிவிக்ரம் – மகேஷ் பாபு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணமே தமன் தான் என சொல்லப்படுகிறது.
தமனின் இசையும் அவரது ஆட்டியூட்டும் மகேஷ் பாபுவுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால், குண்டூர் காரம் படத்தில் இருந்து தமனை நீக்க வேண்டும் என மகேஷ் பாபு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால் தமன் – த்ரிவிக்ரம் இடையே நெருங்கிய நட்பு இருப்பதால் அது நடக்காமல் போயுள்ளது. மேலும் குண்டூர் காரம் டைட்டில் டீசரில் தமனின் பிஜிஎம் ஒர்க்அவுட் ஆகவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் அப்செட்டான மகேஷ் பாபு, குண்டூர் காரம் படத்தின் பாடல்கள் அனைத்தும் தரமாக இருக்க வேண்டும் என வார்னிங் கொடுத்துள்ளாராம். மேலும், குறிப்பிட்ட நாட்களுக்குள் பாடல்களை முடித்துக்கொடுக்க வேண்டும் எனவும் ஆர்டர் போட்டுள்ளாராம். அப்படியில்லை என்றால் தமனை நீக்கிவிட்டு ஜிவி பிரகாஷ் குமாரை கமிட் செய்ய மகேஷ் பாபு முடிவு எடுத்துள்ளாராம். ஏற்கனவே இதுகுறித்த வதந்தி பரவிய போது, தமன் நக்கலாக ஒரு ட்வீட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மீண்டும் மகேஷ் பாபு – தமன் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது டோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்னொரு பக்கம் ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்திற்கும் தமன் தான் இசையமைப்பாளர் என செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது அதுகுறித்தும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.