The boy who travels around the world has achieved the longest flying feat | உலகம் சுற்றும் வாலிபன் அதிக துாரம் பறந்து சாதனை

வாஷிங்டன் : அதிக துாரம் விமானத்தில் பறந்து அமெரிக்காவின் டாம் ஸ்டுக்கர் சாதனை படைத்திருக்கிறார்

அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்தவர் டாம் ஸ்டுக்கர். கார் விற்பனை ஆலோசகரான இவர் 1990ல் அமெரிக்காவின் ‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திடம் ரூ. 2.37 கோடிக்கு வாழ்நாள் ‘அன்லிமிடெட்’ விமான ‘பாஸ்’ வாங்கியிருந்தார். 33 ஆண்டுகளில் 3.70 கோடி கி.மீ., துாரம் விமானத்தில் பறந்துள்ளார். 100 நாடுகளுக்கு மேல் சென்றுள்ளார்.

இச்சாதனையை எட்டிய முதல் ‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ வாடிக்கையாளர் இவர் தான். இந்நிறுவனம் தற்போது இதுபோன்ற பாஸ் வழங்குவதில்லை. இவரது சாதனையை இனி யாரும் முறியடிக்க முடியாது என நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவின் ‘அப்பல்லோ 11’ விண்கலத்தில் நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட 15.33 லட்சம் கி.மீ,. துாரம் தான் சென்றிருந்தார். இவர் நிலவுக்கு சென்ற துாரத்தை விட ஆறு மடங்கு துாரம் பயணித்துள்ளார்.

ஒருமுறை தொடர்ந்து 12 நாட்கள் நியூயார்க் டூ சான்பிரான்சிஸ்கோ பாங்காங் டூ துபாய் என பறந்துள்ளார். அப்போது துாங்காமல் விமான நிலைய ஓய்வறைகளில் ஓய்வெடுத்து பயணித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் 300 முறை விமானத்தில் பயணித்துள்ளார். உலகின் பல நாடுகளின் உயர்தர சொகுசு விடுதிகளில் தங்கியுள்ளார். பல நாடுகளின் உணவுகளை ருசித்துள்ளார்.

இவர் கூறுகையில்’என் வாழ்நாளின் சிறந்த முதலீடு (விமான டிக்கெட்) தான்,” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.