ஜம்மு :இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரையை, ஜம்மு – காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஜம்மு – காஷ்மீரின் இமயமலை பகுதியில், கடல் மட்டத்தில்இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோவில் அமைந்து உள்ளது.இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் யாத்திரை வருவது வழக்கம்.
இந்தாண்டுக்கான யாத்திரை துவங்கியது. 3,400 பேர் அடங்கிய முதல் குழுவினர், பகவதி நகர் முகாமிலிருந்து யாத்திரைக்காக புறப்பட்டனர். ஜம்மு – காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து யாத்திரையை துவக்கி வைத்தார்.
பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார், யாத்திரை வழித்தடம் முழுதும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த யாத்திரைக்காக, 3.5 லட்சம் பேர் முன் பதிவு செய்து உள்ளனர். ஆகஸ்ட் இறுதி வரை யாத்திரை நடக்கவுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement